'இந்தியன்-2’ விபத்து எதிரொலியாக 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் படத்தின் நாயகன் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
'இந்தியன்- 2' படப்பிடிப்பு வேகவேகமாக நடந்து வருகிறது. இரவிலும் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மிகப்பெரிய கிரேனில் ஒளி உமிழும் விளக்குகளை பெரிய பிரேமில் இணைத்து உயரத்தில் தூக்கிப்பிடிக்கும்போது கிரேன் ஒருபுறமாகச் சரிந்து விழுந்தது. இதில் சிக்கிய 3 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் முக்கியமான பிரிவு அஜாக்கிரத்தையாக இருந்து உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருத்தல் பிரிவு. இது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு ஆகும்.
இந்த விவகாரம் தொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் விபத்து நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்த படத்தின் இயக்குநர் ஷங்கர், நாயகன் கமல் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.
» மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள்தான்; கமல் நன்றி
» தமிழகத்தில் 4 ஐஜிக்கள், 8 டிஐஜிக்கள், 7 எஸ்.பி.க்களுக்குப் பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
இது தவிர அங்கு இருந்த உதவி இயக்குநர்கள், கேமராமேன் உள்ளிட்ட பலரையும் அழைத்து வாக்குமூலம் வாங்க உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago