குறைகள் பல இருந்தாலும் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை வரவேற் பதாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளித ழிடம் அவர்கள் நேற்று கூறியதாவது:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்தியிருப்பது வரவேற்கத் தக்கது. காவிரி பாசனப் பகுதிகளான திருச்சி மாவட்டத்தின் லால்குடி, ரங்கம், மண்ணச்சநல்லூர், திரு வெறும்பூர், அரியலூர் மாவட்டத்தின் திருமானூர், டி.பழூர், கரூர் மாவட்டத் தின் குளித்தலை ஆகிய தாலுகாக்கள் இணைக்கப்பட்டால்தான் காவிரி டெல்டா பகுதி முழுமையாக பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டல பகுதி யாக ஆகும். அதுபோல எண்ணெய், எரிவாயு திட்டங்களையும் முழுமையாக தடை செய்ய வேண்டும். இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாநில, மாவட்ட அளவிலான கமிட்டிகளில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன்:
காவிரி டெல்டாவை பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டலமாக அறி விக்க வேண்டும், பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் , பாறை எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை கைவிட வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகளும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதனை ஏற்று தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதை வரவேற்கிறோம்.
இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மத்திய அரசிதழில் வெளியிட மத்திய அரசு முன்வர வேண்டும். சிதம்பரம் - சீர்காழி பகுதிகளில் 47 கிராமங்களில் 47 ஆயிரம் ஏக்கரில் ரிலையன்ஸ் நிறுவனம், திருக்காரவாசலில் வேதாந்தா குழுமம், நெடுவாசலில் கர்நாடகத்தைச் சேர்ந்த நிறுவனம் ஆகியவற்றோடு மத்திய அரசு செய் துள்ள ஒப்பந்தங்களை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் ஒன்றிணைந்து துணை நிற்க வேண்டும்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்:
வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங் கள் ஹைட்ரோகார்பன் பணிகளை மேற் கொள்வதற்காக ஏற்கெனவே நிலம் ஒதுக்கப்பட்டு அதற்கான ஆய்வுப் பணி களும் தொடங்கப்பட்டுவிட்டன. எனவே, ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் தடுக்கிறோம் என அரசு கூறுவதில் எவ்வித நியாயமும் இல்லை. இந்தச் சட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, புள்ளம்பாடி, முசிறி, கரூர் மாவட்டத்தின் குளித்தலை போன்ற பகுதிகள் சேர்க்கப்படவில்லை.
எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று இச்சட்ட மசோதாவை சட்டப்பேரவை ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நீட் தேர்வு சட்டம் போல இதுவும் அமைந்து விடக் கூடாது.
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் ஜெயராமன்:
காவிரிப் படுகை பாதுகாப்புக்கான முதல் சட்டம் என்பதால் இதனை வரவேற் கிறோம். இதன்மூலம் ஆபத்தான ஹைட்ரோகார்பன் திட்டங்கள் வராது என்று நம்புகிறோம்.
ஆனால், இந்தச் சட்டத்தில் காவிரி பாசனப் பகுதிகள் முழுமையாக சேர்க்கப்படவில்லை. திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டத்தின் பாசனப் பகுதிகள் விடுபட்டிருப்பதும், ஏற் கெனவே உள்ள திட்டங்களுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் இது பொருந்தாது என்பதும் இச்சட்டத்தில் உள்ள குறையாகப் பார்க்கிறோம். ஏற்கெனவே உள்ள எண்ணெய் - எரி வாயு திட்டங்களை எதிர்த்துதான் போராடினோம். அது தொடரும் என் றால் மீண்டும் போராட வேண்டிய நிலைதான் ஏற்படும்.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன்:
தமிழக அரசு கொண்டு வந்துள்ள காவிரி டெல்டா பகுதிகள் பாது காக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத் தில், ஏற்கெனவே உள்ள எண்ணெய் - எரிவாயு திட்டங்கள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓஎன்ஜிசி, வேதாந்தா போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களும் தொடரும் என்று தெரிகிறது. அப்படி யானால் காவிரி டெல்டா பகுதிகள் எப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற முடியும். இது அரசியலுக்காக விவசாயிகளை ஏமாற்றும் செயல்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago