நாமக்கல் அருகே 100 வயதை நிறைவு செய்த முதியவர்: கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் 'கேக்' வெட்டிக் கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

நாமக்கல் அருகே தன்னுடைய 100-வது பிறந்த நாளை முதியவர் ஒருவர், கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் நாகலிங்கம் பிள்ளை (100). இவரது மனைவி நாகரெத்தினம். மனைவி உயிரிழந்ததையடுத்து மகன் வையாபுரியுடன் நாகலிங்கம் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று (பொப்.20) நாகலிங்கம் தன் 100-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். 100 வயதை எட்டிய நாகலிங்கத்தின் பிறந்த நாளையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த இவரது மகன், மகள் மற்றும் மருமகன், மருமகள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்திகள் என 150 பேர் இன்று ஒன்றாகக் கூடி வீட்டில் 'கேக்' வெட்டிக் கொண்டாடினர். மேலும், உறவினர்கள் அனைவரும் நாகலிங்கத்திடம் ஆசி பெற்றனர்.

பிறந்த நாளை முன்னிட்டு உணவு சமைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். நூறு வயதான முதியவர் ஒருவர் கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்த சம்பவம் அக்கிராமத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தவறவிடாதீர்!

ஐஐடி பெண்கள் கழிப்பறையில் செல்போன் கேமரா மூலம் படம்: உதவிப் பேராசிரியர் கைது

சிறந்த கைவினைஞர்கள், பட்டு விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களை விரோதியாக எண்ணுவதா?- கமீலா நாசர் கவலை

ஊழியர் பற்றாக்குறையால் பாதிப்பு: பிஎஸ்என்எல் சேவை தொடர மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்