உற்சாகமாக மேளம் இசைத்து அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்

By செய்திப்பிரிவு

சென்னையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பறையிசை கலைஞர்களுடன் சேர்ந்து மேளம் இசைத்து அசத்தினார்.

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் நேற்று (பிப்.19) பேரிடர் மற்றும் தீயணைப்பு மீட்புத் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விபத்து காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு வீரர்கள் மீட்புப்பணிகளில் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

முன்னதாக, பறையிசைக் கலைஞர்களோடு சேர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் மேளம் இசைத்து அசத்தினார். இந்நிகழ்வு அங்கிருந்த மாணவர்களையும், மற்ற அமைச்சர்களையும் உற்சாகப்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் பேரிடர் காலங்களில் எவ்வாறு தற்காத்துக்கொள்ளுவது என்பது குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தவறவிடாதீர்

அவிநாசி அருகே சொகுசுப் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதி கோர விபத்து: 19 பேர் உயிரிழந்த பரிதாபம்; அதிகாலையில் நிகழ்ந்த சோகம்

'இந்தியன் 2' விபத்து: மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்; கமல் வருத்தம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: ஜெயக்குமார் உட்பட 6 பேருக்கு 6 நாள் போலீஸ் காவல்

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் எதிரொலி- சென்னை முழுவதும் கண்காணிப்பு தீவிரம்; வீடியோ எடுக்க ஆணையர் உத்தரவு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்