டிஎன்பிஎஸ்சி தேர்வு: நோகடிக்கும் சீர்திருத்தம்!

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ஆரோக்கியமான, இன்றியமை யாத மாற்றங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிமுகப்படுத்தி உள்ளது.

இதற்கு முன் பிப்ரவரி 7-ம் தேதி, ஆதார் கட்டாயம் உள்ளிட்ட 6 முக்கிய மாற்றங்களை டிஎன்பி எஸ்சி அறிவித்தது. எப்படியேனும் இழந்த நம்பிக்கையை மீட்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் ஆணையத்துக்கு பாராட்டுகள். இனி, சாதக பாதகங் களை பார்ப்போம்.

இரு நிலை தேர்வு

தொகுதி 4 & 2A தேர்வுகள் இது வரை, பொது அறிவுத்தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வாக நடந்து வந்தது. இனி இத்தேர்வுகள் இரு நிலைகளைக் கொண்டதாக - முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளாக நடத்தப்படும்.

இந்த அறிவிப்புக்கு பல முனை களில் இருந்து கண்டனக் குரல் கள் எழலாம். அவற்றில் நியாயமும் இருக்கலாம். ஆனாலும், ஆணை யத்தின் முடிவு, ஏற்கத்தக்கது என்றே தோன்றுகிறது.

ஒரே தேர்வு மட்டுமே எனும் போது, அதுவும் நேர்முகத் தேர்வு இல்லாதபோது, எத்தனை பணி யிடங்கள் உள்ளனவோ, அத்தனை பேர் மட்டுமே தேர்வு செய்யப்படு வார்கள். முதன்மைத் தேர்வு என்று அடுத்த நிலை இருந்தால், பொது வாக 1:3 என்கிற விகிதத்தில், மூன்று மடங்கு பேர் முதல்நிலைத் தேர்வில் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது, பழைய முறையில், ஆயிரம் பணியிடங்களுக்கு ஆயிரம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெறுவர். புதிய முறையில், மூவாயிரம் பேர், முதல்நிலைத் தேர்வில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்வர். இது, தேர்வெழுதும் இளைஞர்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

தொகுதி 1 மற்றும் யுபிஎஸ்சி (ஐஏஎஸ்) தேர்வு நடைமுறையுடன் இது ஒத்துப் போவதால், ஒரு வகையில் சீர்மை (uniformity) ஏற்படவும் ஏதுவாகிறது. இரண்டு நிலைகளிலுமே கேள்விகள், எஸ்எஸ்எல்சி தரத்திலேயே இருக் கும் என்பதால், புதிதாக கடினத் தன்மை எதுவும் வரப் போவ தில்லை. அதனால், இருதேர்வு முறை, யாருக்கும் எதிராக இருக்க சாத்தியமில்லை.

தேர்வு நேரம்

தேர்வர்களின் மெய்த்தன் மையை உறுதி செய்யவும் இதர தேர்வு விதிகளை தேர்வர்களுக்கு விளக்கும் விதமாகவும் 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வருகை புரிதல் வேண்டும்.

இந்த அறிவிப்பு தொலைவில் இருந்து வருகிற சிறு கிராமத் தேர்வர்களுக்கு சிரமமாக இருக்க லாம். ஆனால், இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வருகிற அடுத்த வாசகம் சற்றே வினோதமாகப் படுகிறது. அதாவது ‘10 மணிக்கு மேல் வரும் எந்தத் தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு என்ன பொருள்? ஒருவேளை, '9 மணிக்கு மேல்' என்று இருந்திருக்க வேண்டுமோ? செய்தி வெளியீட்டில் பிழை ஏற்பட்டு விட்டதோ?

அடுத்து, இரு வேளையும் தேர்வு இருந்தால் மாலை 3 மணிக்குத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இதை சற்றே மறுபரிசீலனை செய்ய லாம். மதியம் 3 மணிக்கு தேர்வு தொடங்கினால் அத்தேர்வு மாலை 6:15-க்கு நிறைவடையும். அதன் பிறகு தேர்வர்கள், குறிப்பாக பெண் தேர்வர்கள் பேருந்து பிடித்து தங்கள் கிராமங்களுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படலாம். எனவே மதியம் 2 மணிக்கே தொடங்க முயற் சிக்கலாம்.

கூடுதலாக புதிய வட்டம்

கொள்குறி வகைக் கேள்விகளில் அனைத்துக் கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண் டும். ஒரு வினாவுக்கு விடை அளிக்கவில்லை எனில், கூடுத லாகக் கொடுக்கப்படும் E என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண் டும். மேலும், எத்தனை கேள்வி களுக்கு முறையே A B C D (அ) E நிரப்பியுள்ளனர் என்ற விவரத்தைத் தனியே அதற்குரிய கட்டங்களில் குறிப்பிட வேண்டும். இப்பணிக்காக மட்டும் 15 நிமிடம் கூடுதலாக வழங்கப்படும்.

ஏதேனும் ஒன்றைக் குறிக்கத் தவறினாலும் விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.

இந்தியாவில் எந்தப் போட்டித் தேர்விலும் இல்லாத இந்தப் புதிய நடைமுறை, முறைகேடுகளைத் தடுக்கப் பெரிதும் உதவும் என்று ஆணையம் நம்புகிறது. வரவேற் கப்பட வேண்டிய ஒன்று. விரைவில் மற்ற ஆணையங்களும் இந்த வழிமுறையைப் பின்பற்றலாம். அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி, ஒரு ‘டிரெண்ட் செட்டர்' ஆகலாம். நமக்கு மகிழ்ச்சிதான்.

எந்தவொரு குறிப்பிட்ட நபரின் விடைத்தாளையும் இனம் காண இயலாதவாறு, தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய பகுதி மற்றும் விடையளிக்கும் பகுதி ஆகிய வற்றை, தேர்வர்களின் முன்னிலை யிலேயே தனித்தனியே பிரித்து தேர்வு அறையிலேயே சீலிடப்படும். சீலிடப்பட்ட உறை மீது அறையில் இருக்கும் தேர்வர்கள் சிலரிடம் கையொப்பம் பெறப்படும். எல்லாம் சரிதான். ஆனால், ஏற்கெனவே இது நடைமுறையில் இருந்திருக்க வேண்டுமே..! இப்போதுதான் அறிமுகம் ஆகிறதா? தேர்வாணை யம் தெளிவுபடுத்தினால் நல்லது.

கைரேகைப் பதிவு

அடுத்துதான் வருகிறது அதிர்ச் சியளிக்கும் முடிவு - தேர்வரின் கைரேகைப் பதிவு. தேர்வர்களின் விடைத்தாளை அடையாளம் காண இயலாத வகையில், விடைத் தாளின் விடையளிக்கும் பகுதியில், கையொப்பத்திற்கு பதிலாக தேர்வரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும்.

ஏற்றுக்கொள்ள முடியவில்லை; ஆனால் இதன் அவசியத்தை உணர முடிகிறது. மிகப் பெரிய அளவில் மனதை நோகடிக்கிற இந்த சீர்திருத்தம் நமது சீரழிவின் அடையாளங்களில் ஒன்று. பல தலைமுறையாக கை நாட்டு மக்களாக இருந்து கையெழுத்து இடுகிற நிலைக்கு உயர்ந்த சந்ததியை, மீண்டும் கைரேகைப் பதிவுக்குத் தள்ளிவிட்ட பெரிய வர்கள், புண்ணியவான்கள் கடும் கண்டனத்துக்கு உரியவர்கள்.

“இப்படி எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு அணுக வேண்டிய தில்லை. இதுவும் ஒரு நடைமுறை என்று இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என சிலர் வாதிடலாம். ஆனால், அப்படி ஒப்புக்கொள்ள முடியவில்லை. யாரோ செய்த தீவினைகளின் விளைவாக, நம் இளைய தலைமுறை, கைரேகை பதிவு செய்ய வேண்டி வருகிறது.

இந்த யோசனையால், மன்னிக்க வும், இதயம் நொறுங்குகிறது. வேறு வழியில்லை என்று ஆணையம் கூறுகிறதா..? அல்லது, இதில் என்ன தவறு என்று கருதுகிறதா... தெரியவில்லை.

தலைவர்கள் எவரும் இதனை எதிர்த்ததாக செய்தி வரவில்லை. ‘இதற்குத்தானா ஆசைப்பட்டீர் பெருந்தலைவரே?’ என்று கேட்கத் தோன்றுகிறது.

விடைத்தாள்களைப் பாதுகாப் பான முறையில் எடுத்துவர, ஜிபிஎஸ், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட வண்டிகள்; 24 மணி நேரமும் கண்காணிக்க கட்டுப் பாட்டு அறை; தகவல் பரிமாற் றத்தை எளிமைப்படுத்த, பின்னூட் டங்களைப் பதிவு செய்ய, இணைய தளத்தில் சிறப்புத் தகவல் தளம்...! வரவேற்கலாம்.

இத்தனை நடவடிக்கைகளும் தவறு நேர சாத்தியம் இல்லாத ‘fool proof' தேர்ச்சி முறைக்கு வழி வகுக்கும் என்கிற நம்பிக்கையை வலுவாக ஏற்படுத்துகிறது. ஆனா லும் ஒரு நெருடல், மனதுக்குள் அச்சம் இருக்கத்தான் செய்கிறது.

யாரைக் கொண்டு, எந்த இயந் திரம் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளன..? அந்த முனை, எப்படி இருக்கப் போகிறது..? 50 ஆண்டு கால பாதிப்பு, அத்தனை விரைவில் சரியாகி விடுமா என்ன..?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்