சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்கும் விவகாரம்: வைகோவுக்கு மத்திய சட்ட அமைச்சர் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளையை அமைப்பது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வைத்த கோரிக்கை குறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து மதிமுக தரப்பில் வெளியிட்ட தகவல்:

“மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 12 பிப்ரவரி 2020 அன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம்:

அன்புள்ள வைகோ,

27.11.2019 அன்று, நாடாளுமன்ற மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்தில், உச்ச நீதிமன்றக் கிளையை, சென்னையில் நிறுவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தீர்கள். அதுகுறித்து சில கருத்துகளைத் தெரிவிக்க விழைகின்றேன்.

அரசமைப்புச் சட்டத்தின் 130-வது பிரிவின்படி, உச்ச நீதிமன்ற அமர்வு டெல்லியில் நடைபெறலாம்; அல்லது காலத்திற்கு ஏற்ற வகையில், தலைமை நீதிபதி தீர்மானிக்கின்ற, குடியரசுத் தலைவர் இசைவு அளிக்கின்ற, வேறு இடங்களிலும் நடைபெறலாம்.

கடந்த காலங்களில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து, உச்ச நீதிமன்றக் கிளையை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவிட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சட்ட ஆணையத்தின் 229-வது அறிக்கையின்படி, உச்ச நீதிமன்றத்தின் சுற்று அமர்வுகள் (Cassation Benches), வடபகுதிகளுக்காக டெல்லியிலும், தெற்குப் பகுதிக்கு சென்னை, ஹைதராபாத், கிழக்கில் கொல்கத்தா, மேற்கில் மும்பை ஆகிய இடங்களிலும் நடத்தலாம் எனப் பரிந்துரை செய்துள்ளது.

ஆனால், அதற்கு உச்ச நீதிமன்றம் இசைவு அளிக்கவில்லை. பல்வேறு காலகட்டங்களில் நடுவண் அரசு வழக்குரைஞர்களிடம் (அட்டர்னி ஜெனரல்) கருத்துகள் கேட்கப்பட்டபோது, அவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.

36/2016 ரிட் மனு, தேசிய மேல் முறையீட்டு நீதிமன்றம் (National Court of Appeal) அமைக்க நீதிப் பேராணை கோரிய வழக்கில், 13.07.2016 அன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, இந்தப் பிரச்சினையை அரசமைப்புச் சட்ட அமர்வின் விசாரணைக்குப் பரிந்துரை செய்துள்ளது.

அந்த வழக்கு, தற்போது, உச்ச நீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளது

இவ்வாறு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்''.

இவ்வாறு மதிமுக தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்