குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என பிரதமர் கூறுவது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகின்றது என்பதைக் காட்டுகிறது. கரோனா வைரஸை விட கொடூரமான வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று (பிப்.17) புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத், "தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, மத்திய பாஜக அரசை இந்துத்துவ அமைப்புகள் இயக்குவதை உறுதி செய்துள்ளது.
கடந்த ஆண்டுகளை விட தற்போது தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் 9% அதிகரித்துள்ளன. தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பழங்குடியினருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் எதிரான ஆட்சியாக பாஜக ஆட்சி உள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய முதல் யூனியன் பிரதேசம் புதுச்சேரி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற மாட்டேன் என பிரதமர் கூறியிருப்பது அவர் ஒரு சர்வாதிகாரி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்து வருகிறது.
கரோனாவை விட கொடூரமான வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது. இதைப் பற்றி பிரதமருக்குக் கவலை இல்லை" என சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்
முதல்வராகப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு: எடப்பாடி பழனிசாமிக்கு சரத்குமார் வாழ்த்து
சீனக் கப்பலில் சென்னைக்கு வந்த பூனை: கரோனா வைரஸ் பீதியால் பறிமுதல்
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago