நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள உயிலட்டி பகுதியில் உள்ள சுருக்கு கம்பியில் சிக்கி கொண்ட புலியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பதற்காக வன மருத்துவரின் வருகைக்காக வனத்துறையினர் காத்திருந்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டிப் பகுதியில் பல்வேறு காய்கறி தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த தோட்டத்துக்கு அடிக்கடி வரும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே சுருக்க கம்பிகள் வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், காலை இவ்வழியாக வந்த புலி ஒன்று இந்த சுருக்கு கம்பியில் சிக்கிக் கொண்டது. புலியின் உறுமல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வன மருத்துவர் கோவையில் இருந்து வரவேண்டும் என்பதால் வன அதிகாரிகள் இப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்கள் யாரும் அருகே செல்லாத வண்ணம் பாதுகாத்து வருகின்றனர்.
மருத்துவர் வந்து பிறகு புலிக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் விடும் பணி நடைபெறும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago