விழுப்புரத்தில் உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மர்ம மரணம்: போலீஸார் தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்த சிறுமி சென்னையில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இறப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த ஜூலை 16-ம் தேதி 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி மயங்கி விழுந்தார். உடனடியாக அச்சிறுமி ஜிப்மர்மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்தபோது அந்த சிறுமி பல மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது.

இதையறிந்த புதுச்சேரி குழந்தைகள் நல கமிட்டி விசாரணை மேற்கொண்டபோது, அச்சிறுமியின் சகோதரியும் கூட்டு பாலியல்வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. இதையடுத்து அச்சிறுமியும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இச்சிறுமிகள் தங்களின் பாட்டியுடன் வசித்து வந்தபோது இச்சிறுமிகளை இவர்களின் உறவினர்களான 14 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள பிரம்மதேசம் போலீஸார் வழக்கு பதிந்து உறவினர்கள்14 பேரை கைது செய்தனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமிசென்னை சாலிகிராமத்தில் அவரதுதாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள கழிப்பறை ஒன்றில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற கே.கே.நகர் போலீஸார் சிறுமியின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மீண்டுவந்த சிறுமி, சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்த சம்பவம்குறித்து தொடர் விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்