வனத்துறை அமைச்சரின் செயலால் ஏற்பட்ட சர்ச்சையை சரி செய்ய, சம்பவம் நடந்த தெப்பக்காடு கிராமத்தில் உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தினார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பத்துக்கு உட்பட்டவை உட்பட்ட கேம்ப் பாடி, யானை பாடி, தெப்பக்காடு ஆகிய மூன்று பழங்குடியின கிராமங்களில் 97 குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்த மக்களில் பெரும்பாலானோர் முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் பணிபுரிகின்றனர். ஆண்கள் பாகன்களாகவும், பெண்கள் உதவியாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.
கடந்த 6-ம் தேதி முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாமை தொடங்கி வைக்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்குள்ள விநாயகர் கோயிலுக்கு சென்றனர்.
அதற்காக தனது காலணியை கழற்ற, அங்கு விளையாடிக்கொண்டிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்த செயல் கண்டனத்துக்குள்ளானது.
அவர் வருத்தம் தெரிவித்தாலும், அவரது செயல் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால், அவர் அந்த பழங்குடின சிறுவன மற்றும் அவரது தாய் மற்றும் ஊர் மக்களை அழைத்து சமரசம் செய்துக்கொண்டார்.
சமரசத்தின் ஒரு அங்கமாக, அந்த பழங்குடியினர் கிராமத்துக்கு தேவையானவற்றை உடனடியாக நிறைவேற்ற மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டு சென்றனர்.
உடனடி நடவடிக்கை
இதனால், மாவட்ட உடனடியாக இந்த செயலில் இறங்கியது. முதுமலையில் உள்ள தெக்காட்டில் உள்ள பழங்குடியினரின் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும், பழங்குடியின மக்களிடம் மனுக்களை பெற்றனர். இந்த உடனடி நடவடிக்கை பழங்குடியின மக்களே எதிர்பார்க்கவில்லை.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுபாட்டில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் எந்த வளர்ச்சி பணிக்காகவும் வனத்துறை எதிர்பார்க்க வேண்டும். இந்நிலையில், வனத்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் தங்கள் வாசலை தேடி வருவதை ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
முதுமலை தெப்பக்காடு ஊர் தலைவர் சிக்பொம்மன் கூறும் போது, ‘ ‘எங்கள் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு கேம்ப் பாடியில் அங்கன்வாடி இயங்குகிறது. இந்த மையத்தில் 20 குழந்தைகள் தற்போது படிக்கின்றன.
அங்கன்வாடியில் ஒரு சமையலர் மற்றும் ஆசிரியை என இருவர் பணிபுரிகின்றோம். அங்கன்வாடிக்கு சொந்த கட்டிடம் இல்லாததால், மையம் வாடகை வீ்ட்டில் நடக்கிறது.
அங்கன்வாடிக்கு தனி கட்டிடம் இல்லை. குழந்தைகள் விளையாட மைதானம் இல்லை. இந்த வீட்டின் முன் அறையில் குழந்தைகள் வகுப்பறை நடக்கிறது. குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. ஆனால், சமையலுக்கு தனி இடம் இல்லை. வீட்டின் முன்புறம் அடுப்பு மூட்டி சமையல் செய்வோம். மழை வந்து விட்டால், வீ்ட்டின் உள் அறையில் தான் சமையல்.
இது ஒரு புறம் இருக்க, இந்த வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்கத்து வீ்ட்டிலிருந்து மின் இணைப்பு பெற்றுள்ளோம்.
மேலும், வீட்டின் கூரை ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டினால் ஆனது. இப்பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகம். குரங்குகள் கூரையில் எந்நேரமும் குடியிருக்கின்றனர். கூரையின் மீது குதித்தால், கூரை உடைந்து விடுகிறது.
யானை பாடி தெப்பகாடு பாலத்தின் மறுகரையில் உள்ளதால், பாலத்தை கடந்த குழந்தைகள் அங்கன்வாடி வர வேண்டும். போக்குவரத்து நெரிசல் நிறைந்த நிலையில், குழந்தைகள் பாதுகாப்பாக பாலத்தை கடந்து வருவதே சவாலாக உள்ளது. இதனால், குழந்தைகள் பாதுகாப்பை கருதி சொந்த கட்டிடத்தில் அங்கன்வாடி மையத்தை மாற்ற வேண்டும்.
முதுமலை புலிகள் காப்பகம் தேசிய புலிகள் ஆணையத்தின் கட்டுபாட்டில் உள்ளது. எனவே, இப்பகுதியில் கட்டிடம் கட்டுவது சிக்கல் உள்ளது. எனவே, தகரத்தினலோ அல்லது தற்போது புது வித கட்டுமான யுக்திகள் நிறைய உள்ளதால், அவற்றை பயன்படுத்தி அங்கன்வாடி மையம் அமைக்கலாம். எங்களுக்கு வனமே வாழ்வாதாரம் என்பதால், வனத்துறை வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். மேலும், சுகாதாரமான நீர் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago