விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.பி., எம்.எல்.ஏ தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் நகர் பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெறாததைக் கண்டித்தும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் தலைமையில் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
இப்போராட்டத்திற்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை எனினும் 300க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யுடன் காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மேம்பாலப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், விரைவில் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் ராஜபாளையம் பகுதி மக்களைத் திரட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என எம்.எம்.ஏ. தங்கப்பாண்டியன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago