தூத்துக்குடியில் மாணவிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு தன் உயிரை விட்ட ஆட்டோ ஓட்டுநரின் மனிதம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு தன் உயிரை விட்ட ஆட்டோ ஓட்டுநரின் மனிதம் பரவலாகப் பாராட்டுக்குள்ளாகி வருகிறது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கம். இவர் காலையும் மாலையும் ஆட்டோவில் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

தனது ஆட்டோவில் வரும் மாணவிகளிடம் இவர் அன்போடும் பண்போடும் இருப்பதால் மாணவிகள் இவரை ஆட்டோ மாமா என்றே பிரியமாக அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ராமலிங்கம் நேற்று மாலை மாணவிகளைப் பள்ளியில் இருந்து ஆட்டோவில் அழைத்து வந்துகொண்டிருந்தார். ஆட்டோ தேரடிதிடல் அருகே வரும்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆட்டோவை நிறுத்திய அவர் மாணவிகளை தன் ஆட்டோவில் இருந்து இறக்கி அடுத்த ஆட்டோ ஒன்றில் வீடு போய் சேர ஏற்பாடு செய்துள்ளார். பின் ஆட்டோவில் இருந்தபடியே நெஞ்சுவலியால் துடித்த ராமலிங்கம் ஆட்டோவிலேயே பரிதாபமாக இற்ந்துள்ளார்.

உயிர்போகும் தருவாயிலும் தன் ஆட்டோவில் வந்த குழந்தைகள் பத்திரமாக வீடு போய் சேரவேண்டும் என்ற நினைத்த ராமலிங்கத்தின் மனிதம் பாராட்டைப் பெற்றுவருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்