தற்காப்புக் கலையான டேக்வோண்டோவில் கணவன் மனைவி சேர்ந்து 154 கிக் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.
மதுரை டேக்வாண்டோ அகாடமி பயிற்சியாளர்கள் நாராயணன் மற்றும் அவரின் மனைவி ஸ்ருதி. இருவரும் இணைந்து டேக்வாண்டோ என்ற தற்காப்புக் கலையில் சாதனை புரிந்துள்ளனர்.
அதாவது, ஒரு நிமிடத்தில் 154 கிக் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். இச்சாதனை முயற்சி கடந்த ஜனவரி 20-ம் தேதி பதிவு செய்யப்பட்டு கின்னஸ் ஆய்வாளர்களுக்கு அனுப்பப்பட்டது.
அச்சாதனை முயற்சியை அங்கீகரித்து அது வெற்றி பெற்றதாக அறிவித்துள்ள கின்னஸ் நிறுவனம் அதற்கான சான்றிதழை வங்கியுள்ளது.
டேக்வோண்டோவின் முந்தைய சாதனையாக 150 கிக் இருந்து உள்ளது.
நாராயணன் - ஸ்ருதி தம்பதியினர் 154 கிக் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தற்காப்புக் கலைகளில் கின்னஸ் உலக சாதனை படைத்தது உலகில் இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, இதுவரை நாராயணன் பதினைந்து கின்னஸ் உலக சாதனைகளும் ஸ்ருதி இரண்டு கின்னஸ் உலக சாதனைகளும் படைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
16 hours ago