டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்றிரவு அறிவிப்பு வந்து உடனடியாக அது அமலானது.
தமிழகத்தில் 1980-க்குப் பிறகு மதுவிலக்கு நீக்கப்பட்டது. அதன் பின்னர் சாராயக்கடை, ஒயின்ஷாப்கள் தொடங்கப்பட்டன. ஒயின்ஷாப்கள் தனியார் வசம் இருந்தன. குறிப்பாக அரசியல்வாதிகள், பணவசதி மிக்கவர்கள் கையில் இருந்தது. ஒருவருக்கே பத்துக்கும் மேற்பட்ட ஒயின்ஷாப்கள் இருந்தது தனிக்கதை.
சாதாரண மக்கள், உழைப்பாளிகள் அடிமட்டத்தில் இருப்பவர்கள் குறைந்த விலையில் மது அருந்தும் வாய்ப்பை சாராயக்கடைகள் ஏற்படுத்தின. ஒருகட்டத்தில் சாராயக் கடைகள் இழுத்து மூடப்பட்டன. அங்கு பெரிய நிறுவனங்களின் மதுபானங்கள் விற்பனைக்கு வந்தன. இதற்காக பெரும் அரசிய்ல செல்வாக்கு மிக்கவர்கள் மதுபானத் தொழிற்சாலைகளை நிறுவி அரசுக்கு சப்ளை செய்தனர்.
மதுபானத்தில் வருமானம் அதிகரிக்க ஆரம்பித்தது. மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தவுடன் அரசு தமிழ்நாடு வாணிபக் கழகம் மூலம் மதுபானக் கடைகளைக் கையிலெடுத்து தனியாருக்கு ஏலம் விட்டு அரசே மதுவை கொள்முதல் செய்து சப்ளை செய்தது. பின்னர் தனியார் முதலாளிகள் கையில் லாபம் செல்வதும், பலரும் கூட்டு வைத்துக்கொண்டு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துவதையும் கணக்கில் கொண்டு 2003-ல் அரசே மதுக்கடைகளை நடத்தும் முறை கொண்டு வரப்பட்டது.
இதற்காக மாநில அளவில் ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர் டாஸ்மாக் கடைகளுக்காக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2010 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்குத் தமிழகமெங்கும் 6,500 மதுக்கடைகளும், 41 சேமிப்புக் கிடங்குகளும் இருந்தன. இந்நிறுவனத்தில் மொத்தம் 36,000 ஊழியர்கள் பணியாற்றுவதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் மது வருமானத்தில் அரசின் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கும் அளவுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைப்பதாகக் கூறப்பட்டது. ஆண்டுதோறும் பண்டிகை காலங்கள், விஷேச தினங்களில் பல நூறு கோடிக்கு மது விற்பனை ஆகிறது.
தினசரி உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு மதுவையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் மதுபானங்களின் விலையைக் கடுமையாக அரசு உயர்த்தியுள்ளது. நேற்றிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட குவார்ட்டர் அளவு மது பாட்டில்களுக்கு 10 ரூபாயும், பீர் பாட்டில்களுக்கு 10 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஃபுல் பாட்டில் விலை ரூ.40 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆஃப் பாட்டில் விலை ரூ.20, ஃபுல் பாட்டில் விலை ரூ. 40-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பீரின் விலையும் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 2017-ம் ஆண்டு மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக உயர்த்தப்பட்ட விலை உயர்வால் இதன் மூலம் நாள் ஒன்றிற்கு சராசரியாக 68 கோடி ரூபாய் முதல் 70 கோடி ரூபாய் வரையிலும், ஆண்டுக்கு சுமார் 2,500 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
தவறவிடாதீர்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago