டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பதிவுத் துறையைச் சேர்ந்த 6 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை தொடர்ந்து குரூப்-2 தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, குரூப்-2 தேர்வு எழுதி தற்போது பணியில் உள்ளவர்கள், தேர்வு தொடர்பாக முகவர்களாக செயல்பட்டு, பணம் பெற்றுத் தந்தவர்கள் என பலரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
குறிப்பாக, குரூப்-2 தேர்வு தொடர்பாக, காவல்துறையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் பதிவுத் துறையைச் சேர்ந்த பாளையங்கோட்டை மாவட்ட பதிவாளர் அலுவலக உதவியாளர் கே.ஜெயராம், காரைக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலக உதவியாளர் வேல்முருகன், தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலக உதவியாளர் பி.சுதா, சென்னை பதிவுத் துறை தலைவர் அலுவலக உதவியாளர் ஞானசம்பந்தம், செம்பியம் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் வடிவு, செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் எம்.ஆனந்தன் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைதான காவலர்கள் சித்தாண்டி மற்றும் பூபதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, பதிவுத் துறையைச் சேர்ந்த 6 பேரையும் சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago