அவிநாசி அருகே பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலியான சம்பவம்: விபத்துக்கு அதிக வேகம், குறைந்த கட்டணம் காரணமா?

By இரா.கார்த்திகேயன்

கோவை - ஈரோடு வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் அதிக வேகமும், குறைந்த கட்டணமும்தான் அவிநாசி அருகே நேற்று நடந்த விபத்தில் அதிக உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நேற்று தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர், 28 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தை பார்த்தவர்கள் கூறியதாவது:

விபத்துக்குள்ளான தனியார் பேருந்தில் சுமார் 75 பயணிகள் இருந்தனர். படிக்கட்டுகள் வரை நின்றுகொண்டு பயணித்தனர். ஈரோடு - கோவை செல்லும் அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தனியார் பேருந்துகளில் ரூ.45 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

கோவை - ஈரோடு வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள், 1 மணி நேரம் 45 நிமிடங்களிலும், அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகள் 2 மணி நேரம் 30 நிமிடங்களிலும் செல்கின்றன. இந்த வழித்தடத்திலுள்ள கருமத்தம்பட்டி, பெருமாநல்லூர், செங்கப்பள்ளி, பள்ளக்கவுண்டம்பாளையம், விஜயமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் மட்டுமே செல்லும். சில அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகள் மட்டுமே, மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்லும். இதனால், தனியார் பேருந்துகளையே அதிகளவில் பொதுமக்கள் நாடுகின்றனர் என்றனர்.

விபத்தில் சிக்கிய வினித் அகர்வால் கூறும்போது, “ஈரோட்டில் கிளம்பியதில் இருந்தே தனியார் பேருந்து அதிக வேகத்தில்தான் சென்றது. பயணிகள் சுமார் 75 பேர் இருப்பார்கள். பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த மகன் தர்ஷ் அகர்வால் இறந்துவிட்டான்” என்றார் கதறி அழுதபடி… மற்ற பயணிகள் கூறும்போது, “பேருந்து கவிழும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பக்கவாட்டில் உள்ள கம்பியில் மோதியபடி 100 மீட்டர் வரை சென்றது. ஒருகணம் என்ன நடக்கிறது என்று கணிக்க முடியவில்லை. அதிக அளவில் பயணிகள் படுகாயமடைய இதுவும் ஒரு காரணம்” என்றனர்.

இதுதொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் சரவணன், நடத்துநர் பழனிச்சாமி ஆகியோரிடம் அவிநாசி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்