கைது செய்யப்படும் நபர்களுக்கு தண்டனை கிடைக்கும் விகிதம் குறைந்து வருவதால் வழக்கு களின் விசாரணையை நேரடியாக கண்காணிக்குமாறு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. உத்தர விட்டுள்ளார்.
தமிழக காவல் துறை டிஜிபி அசோக்குமார் அண்மையில் அனைத்து மாநகர காவல் ஆணை யர்கள், மாவட்ட எஸ்.பி-க்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
குற்றவாளிகளுக்கு கிடைக்கக் கூடிய தண்டனை விகிதம் சராசரி யாக குறைந்து வருவதற்கு புலன் விசாரணை சரியாக இல்லாததும் ஒரு காரணம்.
மாநகர துணை ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி-க்களே எல்லா வேலைகளையும் செய்ய முடி யாது. இருந்தாலும் தங்களது பகுதியில் நடைபெறும் முக்கிய வழக்குகளின் (கொலை, ஆதாயக் கொலை, பாலியல் பலாத்காரம், கொள்ளை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை) விசாரணையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
நீதிமன்றத்தில் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்வதற்குமுன் அவற்றை நன்கு ஆய்வு செய்ய வேண்டும். தவறுகள் இருந்தால், உடனடியாக திருத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் விசாரணை அதி காரிகளுக்கு (எஸ்.ஐ, இன்ஸ்பெக் டர், டி.எஸ்.பி.) புலனாய்வு குறித்து சிறப்பு பயிற்சிகள் அளிக்க வேண் டும். இதற்கு உடனடியாக தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றி காவல் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, “நீதிமன்றங்களுக்குச் செல்லும் போது சாட்சிகளுக்கு ஒருவித பயம் ஏற்பட்டுவிடுகிறது. இதை பயன்படுத்தி எதிர்தரப்பு வழக்கறி ஞர்கள் அந்த வழக்கையே உடைத்துவிடுகின்றனர்.
அதே போல குற்றப்பத்திரிகை தயார் செய்யும்போது சில அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதால், அதிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர்.
இனிவரும் காலங்களில் குற் றத்துக்கான ஆதாரங்கள், சாட்சி களை அதிகளவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்தும் அதிகாரி களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத்தர பேருதவி யாக இருக்கும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago