மக்களுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தாது என 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திருவண்ணாமலை பெருமாள் கோவிலில் தனது பேத்தியின் முடி எடுத்தல் காதணி விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் அந்த கோரிக்கையை ஏற்று பொதுத்தேர்வு இல்லை என்ற மக்கள் விரும்புகின்ற அறிவிப்பை அறிவித்துள்ளோம். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தாது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மனித சங்கிலிப் போராட்டத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியதால் கல்வித்துறை மூலம் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்தை எடுக்கப்படும்.
100% ஜனநாயக முறைப்படி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் எப்போது போது அறிவித்தாலும் இந்த அரசு தேர்தலை நடத்தும்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். திமுகவிற்கு புகார் கொடுப்பது மட்டும் தான் வேலை. விரக்தியின் காரணமாக ஆளுநரிடம் திமுக மனு கொடுத்துள்ளது. திமுக பேசும் கருத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் அவர்கள் எந்தக் கருத்தும் பேச முடியாது.
திமுக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஆலோசனைக்கு பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்துள்ளது குறித்த கேள்விக்கு, அது அவர்கள் நிலைப்பாடு, நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திப்போம்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago