தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழா: சம்ஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழிபெயர்த்து தெரிவிக்கக் கோரி வழக்கு

By செய்திப்பிரிவு

தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் உச்சரிக்கும் சம்ஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழிபெயர்த்து தெரிவிக்கக் கோரிய வழக்கை பொதுநல வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதிக்குப் பரிந்துரை செய்து தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

தஞ்சைப் பெரிய கோயில் பிரகதீஸ்வரர் கோயிலின் குடமுழுக்கு விழா நாளை (பிப்ரவரி 5) நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான பூஜைகள் ஜனவரி 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் ஓதப்படும் சம்ஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து தெரிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

மந்திரங்களை தமிழில் சொல்லும்போதுதான் அதன் அர்த்தங்களை பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதால், குடமுழுக்கு விழாவில் உச்சரிக்கும் மந்திரங்களை தமிழில் மொழி பெயர்த்து தெரிவிக்கும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி திருவள்ளூரைச் சேர்ந்த ஸ்ரீமாணிக்கானந்தா என்கிற மாணிக்கம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கில், குடமுழுக்கு விழாவின்போது தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்ஸ்கிருத மந்திரங்களின் தமிழ் மொழி பெயர்ப்பு உள்ளதா எனவும், எந்த அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டது எனவும் மனுதாரருக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு இந்து சமய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி தொடரப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியதால், இந்த வழக்கை பொதுநல வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் பட்டியலிடப் பரிந்துரைத்து தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

தவறவிடாதீர்...

ராஜராஜன் நுழைவு வாயிலும், மகா துவார வாயிலும்!

அன்பால் கேரளத்தை அளந்த மாமன்னன் ராஜராஜன்

ராஜராஜ சோழனின் மழைநீர் சேகரிப்பு மேலாண்மை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE