முதல்வரைப் புகழும் பாடல்களுடன் திருவரங்கத் திருமகள் ஆல்பம்: முஸ்லிம் கவிஞர் உருவாக்கியது

By செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து முஸ்லிம் கவிஞர் உருவாக்கிய ‘திருவரங்கத் திருமகள்’ என்ற இசை ஆல்பம் சென்னையில் விரைவில் வெளியிடப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து ‘திருவரங்கத் திருமகள்’ என்ற கவித்துவமிக்க பாடல்கள் கொண்ட இசை ஆல்பத்தை முஸ்லிம் கவிஞரும், வழக்கறிஞருமான அ.அப்ரார் அகமத் உருவாக்கியுள்ளார். இதற்கு எம்.கார்த்திக் இசையமைத்திருக்கிறார்.

இதுவரை வெளிவந்துள்ள கட்சிகளின் பிரச்சார இசைப்பாடல்கள் அனைத்திலும் முற்றிலும் வேறுபட்ட தரத்தில் இந்த படைப்பு அமைந்திருக்கிறது. வெவ்வேறு சூழல்கள், கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 6 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி அப்ரார் அகமத் கூறுகையில், ‘‘முதல்வர் ஜெயலலிதாவின் அபிமானிகளும் கட்சித் தொண்டர்களும் தங்கள் செல்போன்களில் அழைப்பு பாடல்களாக அம்மா என்றால் அன்பு, தொட்ட இடம் துலங்க வரும் போன்ற திரையிசைப் பாடல்களை வைத்துள்ளனர். இது அவர்களைப் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தி வந்தன. ‘திருவரங்கத் திருமகள்’ இசைத்தட்டில் இடம்பெற்றுள்ள பாடல்கள் புதிய தலைமுறையினருக்கு மிகவும் பிடிக்கும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்