தூய்மை நகரங்கள் வாக்கெடுப்பில் முதலிடம் யாருக்கு?- மதுரை - கோவை கடும் போட்டி: மாநகராட்சி வேண்டுகோள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தூய்மை நகரங்கள் வாக்கெடுப்பில் தமிழகத்தில் முதலிடத்திற்கான போட்டியில் மதுரைக்கும், கோவைக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பு ஜனவரி 31-ம் தேதி வரை மட்டுமே நடப்பதால் இந்த வாக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்க வேண்டும் என்று மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு முழுவதும் மத்திய வீ்டடுவசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் ‘ஸ்வச் சர்வேஷன் சர்வே 2020’(swachh survekshan2020) என்ற தூய்மையான நகரங்கள் கணக்கெடுப்பு நடக்கிறது.

இதில், மாநகராட்சியின் ஒட்டுமொத்த செயல்பாடு, சுகாதாரத்திட்டங்களை செயல்படுத்தியதை ஆவணப்படுத்தியது, திறந்த வெளி கழிப்பிடம் இல்லாதது, பொதுமக்கள் வாக்குகள் மற்றும் மாநகராட்சி சமர்ப்பித்த தகவல்களை தனியார் ஏஜென்சி செய்யும் ஆய்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கி தூய்மையான நகரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பில், திட்டங்களை செயல்படுத்தியதை ஆவணப்படுத்தியது, மாநகராட்சி செயல்பாடு போன்றவற்றில் தமிழகத்திலே மதுரை மாநகராட்சிதான் தற்போது வரை முதலிடத்தில் உள்ளது. அதுபோல், பொதுமக்கள் வாக்கெடுப்பில் 2 நாளுக்கு முன் வரை மதுரை மாநகராட்சி முதலிடத்திலும், கோவை இரண்டாம் இடத்திலும் இருந்தது.

ஆனால், கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்பாட்டில் அந்த மாநராட்சி பொதுமக்கள் அதிகளவு வாக்கெடுப்பில் ஆர்வமாக பங்கெடுப்பதால் கடந்த 2 நாளாக மதுரை 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கோவை முதலிடத்தை பிடித்துள்ளது.

பொதுமக்கள் வாக்கெடுப்பு வரும் 31-ம் தேதி வரை மட்டுமே நடக்கிறது. இன்னும் 3 நாட்கள் மட்டுமே மீதமுள்ளன. இந்த நாட்களில் மதுரை மாநகராட்சி மக்கள், இந்த வாக்கெடுப்பில் ஆர்வமாக பங்கேற்று, மதுரை மாநகராட்சிக்கு சாதகமாக வாக்களித்தால் மதுரை மாநகராட்சி தமிழகத்திலேயே தூய்மையான நகரங்கள்பட்டியலில் முதலிடத்தைப் பெற வாய்ப்புள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘திட்டங்களை செயல்படுத்தியதை ஆவணப்படுத்தியது, மாநகராட்சி செயல்பாடு போன்றவற்றில் மதுரை மாநகராட்சியை கோவை பின்னுக்கு தள்ள வாய்ப்பே இல்லை. இந்த இரண்டிலும் மற்ற மாநகராட்சிகளை விட மதுரை அதிகமான மதிப்பெண்களை பெற வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் வாக்களிப்பில் பின்தங்கினாலும் இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி முதலிடத்தை பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

அதனால், கோவை மாநகராட்சியில் முடிந்தளவு மதுரைக்கு போட்டிக்கொடுத்து முதலிடத்தைப் பெற பொதுமக்களை மாநகராட்சி ஆதரவாக வாக்களிக்க அந்த ஊர் அமைச்சர், ஆளும்கட்சியினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அதுபோல், மதுரை மாநகராட்சி மக்களும் மீதமுள்ள 3 நாளில் தூய்மையான நகரங்கள் வாக்கெடுப்பில் ஆர்வமாக பங்கேற்றால் மதுரை மாநகராட்சிக்கு இன்னும் அதிகமான மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க செல்போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் ss2020 voteForYourCity என்ற ஆப்பை டவுன்லோடு செய்து வாக்களிக்கலாம். அல்லது Sbm urban - citizen feedback portal, SS2020 vote for your city app, 1969 ivrs no call, outbouncing calls, swatchhata ஆகிய முறைகளிலும் வாக்களிக்கலாம், ’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்