காங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சியினருடன் கூட்டுசேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர் என திமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில் திமுக சார்பில் வெற்றிபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருமயம் தொகுதி எம்எல்ஏ எஸ்.ரகுபதி, ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் திமுகவினர் பேசியதாவது: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருமயம் ஒன்றியத்தில் சில திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறாததற்கு திமுகவினரே காரணம். மேலும், பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ் கவுன்சிலர்களாலும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்ட திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவராலும், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியை திமுககைப்பற்ற முடியாமல் போனது.மறைமுக தேர்தலில் அதிமுகவுக்குவாக்களித்த திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் யாரென கண்டறிந்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதன்பிறகு எஸ்.ரகுபதி பேசியதாவது: மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தேர்தலில் அதிக இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியதால் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியை திமுகதான் கைப்பற்றும் என்று எண்ணியநிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் செய்த துரோகத்தாலும், திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஒருவர் அதிமுகவுக்கு வாக்களித்ததாலும் அதிமுகவிடம் திமுக தோல்வி அடைந்தது.

மாற்றுக் கட்சியினர் துரோகம் செய்து மறைமுக தேர்தலில் திமுக உறுப்பினருக்கு வாக்களிக்கவில்லை என்பதை விட, திமுகவைச் சேர்ந்த ஒருவரே அதிமுகவுக்கு மாறி வாக்களித்துள்ளார் என்பது வேதனை அளிக்கிறது.

கோழைத்தனமாக எங்களை நம்ப வைத்து, மாறி வாக்களித்து காங்கிரஸ் கட்சியினர் எங்களை கவிழ்த்துவிட்டனர். மேலும், மறைமுக தேர்தலில் மாறி வாக்களித்து திமுக மாவட்டக் குழுஉறுப்பினர் ஒருவரும் கவிழ்த்துவிட்டார். அவர் யார் என்று கண்டறிவதற்காக திமுக கவுன்சிலர்களிடம் கேட்டால், என் மீது சந்தேகப்படுகிறீர்களா என்று வீடு தேடி வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்