நாடு முழுவதும் தூய்மை நகரம் கணக்கெடுப்பு தொடக்கம்: ‘ரேங்க்’ பட்டியலில் மதுரை முன்னேற்றம் பெறுமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் தூய்மை நகரங்கள் கணக்கெடுப்பு நடக்கிறது. இதில், பொதுமக்களே நேரடியாக ஆன்லைனில் பங்கேற்கு தங்கள் நகரின் தூய்மைக்கான மதிப்பெண்களை பதிவு செய்யலாம்.

மத்திய வீ்டடுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் ‘ஸ்வச் சர்வேஷன் சர்வே 2020’(swachh survekshan2020) என்ற தூய்மையான நகரங்கள் கணக்கெடுப்பை தற்போது மேற்கொண்டுள்ளது. வரும் ஏப்ரல் 31-ம் தேதி வரை நடக்கும் இந்த கணக்கெடுப்பில்

பொதுமக்கள், அவர்கள் வசிக்கும் நகரின் சுகாதாரம், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது எந்தளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது,
அதற்கான மதிப்பெண்ணை 0 முதல் 10 வரையிலான அளவுகோலில் அவர்களே அவர்கள் நகருக்கான மதிப்பெண்ணை வழங்கலாம்.

பொதுமக்கள், தங்கள் செல்போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் ss2020 voteForYourCity என்ற அப்பை டவுன்லோடு செய்து, இந்த கணக்கெடுப்பில் பங்கேற்கலாம்.

அல்லது, கூகுளில் swachh survekshan2020 டைப் செய்து, அதில் வரும் லிங்கை தேர்வு செய்து பங்கேற்கலாம். இந்த கணக்கெடுப்பில் பங்கேற்போரிடம், ஆன்லைனில் மொத்தம் 7 கேள்விகள் கேட்கப்படுகிறது.

உங்கள் நகரம் ‘ஸ்வச் சர்வேஷன் 2020ல் பங்கேற்கிறது என்பதை அறிந்துள்ளீர்களா? என்ற கேள்விவுக்கு ஆம்/இல்லை என்று பதில்தெரிவிக்கலாம்.

குப்பைகள் உலர் மற்றும் ஈர கழிவுகள் தனித்தனியாக பிரித்து குப்பைகள் வாங்கப்படுகிறதா? உங்கள் நகரச்சாலைகளில் உள்ள சாலை டிவைடர்கள் சரியான முறையில் செடிகளால் கவர் செய்ப்பட்டுள்ளதா?, பொது மற்றும் சமூக கழிப்பறைகளுக்கு 0 முதல் 10 வரையிலான அளவில் நீங்கள்அளிக்க எத்தனை மதிப்பெண் அளிக்க விரும்புகிறீர்கள்?

உங்கள் நகரத்தில் திறந்த வெளி கழிப்பறை இல்லை என்று அறிவிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்களா? உங்கள் நகரம் குப்பையில்லா நகரம் என்பதற்கு 1 முதல் 7 வரையில் நீங்கள் அளிக்க விரும்பும் ஸ்டார் மதிப்பீடு அல்லது எந்த ஸ்டாரும் இல்லை என்று பதிவு செய்யலாம்.

பொதுமக்கள், இந்த சர்வேயில் பங்கேற்று மதுரை மாநகராட்சியின் சுகாதாரநிலை, அதன் முன்றேன்றம் பற்றி கருத்துகளையும் தெரிவித்து மதிப்பெண் வழங்கலாம்.

கடந்த ஆண்டு மதுரை மாநகராட்சி இந்திய அளவில் நடந்த இதே தூய்மை நகரங்கள் பட்டியலில் 201 இடத்திற்கு பின்தங்கியது. தற்போது நடக்கும் தூய்மை நகரங்கள் பட்டியல் கணக்கெடுப்பு பற்றி மாநகராட்சி பொதுமக்களுக்கு இதுவரை எந்த விழிப்புணர்வும் செய்யாமலே உள்ளது.

அதனால், பெரும்பான்மை மாநகராட்சி பொதுமக்களுக்கு இதுபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்படுவது தெரியாமல் உள்ளது.

மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்களே, அவர்கள் செல்போனில் இந்த கணக்கெடுப்பு அப்பை உபயோகித்து, அவர்களுக்கு தெரிந்தவர்கள்,மாநகராட்சி பல்வேறு காரணங்களுக்கு வருகிறவர்களிடம் மட்டுமே இந்த கணக்கெடுப்பை மேற்கொள்கின்றனர்.

அதனால், இந்த கணக்கெடுப்பில் மாநகராட்சி பெரும்பான்மை மக்கள் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்காமல் உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, ‘‘நகரின் சுகாதாரம் ஒரளவுக்கு பரவாயில்லை. ஆனால், மக்கள் எந்த மனநிலையில் வாக்கெடுப்பில் பங்கேற்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

அதனால், விழிப்புணர்வுசெய்து பங்கேற்க வைத்தால் அவர்கள் குறைவான மதிப்பெண்ணை வழங்கினால் மாநகராட்சி கடந்த ஆண்டைவிட இன்னும் ரேங்க் பட்டியலில் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது.

அதனாலேயே, பெரியளவில் இந்த கணக்கெடுப்பை மக்களிடம் மாநகராட்சி கொண்டு சேர்க்க ஆர்வப்படவில்லை, ’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்