துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் திராவிட மாயை ஆட்கொண்டு விட்டது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
இந்து மக்கள் கட்சி (தமிழகம்) அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமைப்பின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆன்மிக அரசியல் கொள்கைகள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் வார இதழ் நிகழ்ச்சியில் பேசும்போது, 1971-ம் ஆண்டில் ராமர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை பேசினார். இதை திராவிடர் கழகத்தினர் எதிர்க்கின்றனர். அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்துகின்றனர். வழக்கு போடுவதாக மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் அவர் அஞ்சப்போவதில்லை. ரஜினிக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவருக்கு எனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறேன். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நல்ல கடவுள் பக்தர். அவரைக் கூட திராவிட மாயை ஆட்கொண்டு விட்டது. உண்மையில் அவர் ஈ.வே.ரா. கொள்கை கொண்டவர் இல்லை. ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும்.
தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு திமுக ஆட்சி காலத்தில் நடந்தபோது ஆகம முறைப்படி நடைபெற்றது. குடமுழுக்கு நடத்த மொழி ஒரு முக்கியமில்லை. குழப்பம் ஏற்படுத்தவே தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என சிலர் தெரிவிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago