ராஜராஜ சோழனின் பாட்டி செம்பி யன் மாதேவிக்கு ஐம்பொன்னில் சிலை வடிக்கும் பணி சுவாமிமலை யில் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.
அரிஞ்சய சோழன், கண்டரா தித்த சோழன், சுந்தர சோழன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், உத்தம சோழன் - இந்த ஆறு பேரரசர்களின் ஆட் சிக்கு ராஜமாதவாக இருந்து வழிகாட்டியவர் செம்பியன் மாதேவி. இவர் பிறந்த ஊர் குறித்து பல்வேறு தகவல்கள் சொல்லப்பட்டாலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்பியக்குடி மக்கள் செம்பியன் மாதேவி தங்கள் ஊரில் பிறந்தவர் என்று உறுதிபட நம்புகிறார்கள். அதற்காகவே அவருக்கு தங்கள் ஊரில் ஐம்பொன் சிலை எடுக்கிறார்கள்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசினார் சிலை அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.எம்.சந்திரசேகர். ’’செம்பியன் மாதேவி எங்கள் ஊரில் பிறந்தவர். பக்கத்திலுள்ள கண்டராதித்தத்தில்தான் அவரை திருமணம் முடித்த கண்டராதித்த சோழன் வசித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் பிறந்த அந்த வரலாற்று நாயகிக்கு சிலை வைக்க வேண் டும் என்பது எங்கள் ஊர் எடுத்த முடிவு.
நாகை மாவட்டம் செம்பியன் மாதேவியில் உள்ள கைலாசநாதர் கோயில் செம்பியன் மாதேவி கட்டியது. அவரது கொள்ளுப் பேரன் ராஜேந்திர சோழன் அந்தக் கோயிலில் செம்பியன் மாதேவிக்கு ஐம்பொன் மற்றும் கற்சிலைகளை பின்னாளில் நிறுவினான். நாங்கள் சிலை வைக்கும் பணியை தொடங் கும் முன்பாக, ஊரிலிருந்து நூறு பேர் சீர் எடுத்துச் சென்று செம்பியன் மாதேவியிலுள்ள செம்பியன் மாதேவி சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்தோம்.
தனிப்பட்ட நபர்கள், சிலையை வைத்தால் அது அவர்களை வாழ வைத்தாலும் வைக்கும் கீழே தள்ளினாலும் தள்ளிவிடும். எனவே, ஊர்மக்கள் அனைவரது பங்களிப் புடன் சிலையை வையுங்கள் என்று ஸ்தபதிகள் சொன்னார்கள். அதனால், ஊர் முழுக்க சிலை வைக்க ஐம்பொன் திரட்டும் பணியை தொடங்கினோம். மக் கள் தங்களிடமிருந்த பித்தளை, வெண்கலம், வெள்ளி உள்ளிட்ட பாத்திரங்களையும் 2 சவரன் தங்கத் தையும் சிலைக்காக கொடுத்தார் கள். மொத்தம் சுமார் 450 கிலோ வுக்கு ஐம்பொன்னும் ஒரு லட்ச ரூபாய் நிதியும் திரட்டப்பட்டது. இன்னமும் நிதி தேவைப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 10-ல் ஸ்தபதி யிடம் சிலை செய்யும் பொறுப்பை முறைப்படி ஒப்படைத்தோம். இப் போது, சிலையின் மெழுகு வடிவம் செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஆறே முக்கால் அடியில் தயாராகும் இந்த சிலையை டிசம்பர் மாதம் எங்கள் ஊரில் நிறுவி அந்த இடத் தில் பூங்கா ஒன்றையும் அமைக்க இருக்கிறோம். செம்பியன் மாதேவி சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத் தில் பிறந்தவர். இனி ஆண்டுதோறும் எங்கள் ஊரில் அவரது பிறந்த நாளை விழாவாக கொண்டாட தீர்மானித்திருக்கிறோம்.
தஞ்சைக்கு வரும் சுற் றுலா பயணிகள் இனி செம்பியக் குடிக்கும் வருவார்கள். நாங்கள் செம்பியன் மாதேவிக்கு சிலை அமைப்பதை அறிந்த கண்டரா தித்தம் கிராமத்து மக்கள் தங் கள் ஊரில் கண்டராதித்தனின் மகன் உத்தம சோழன் கட்டிய சொக்கநாதர் கோயிலில் கண் டராதித்தனுக்கு சிலை வைக்க முடி வெடுத்திருக்கிறார்கள்’’ என்று சொன்னார் .
செம்பியன் மாதேவி சிலையை வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுவாமிமலை ஸ்தபதி ராகவானந் தம் கூறுகையில், ‘‘ஐந்து பேரின் ஒருமாத உழைப்பில் அற்புதமாய் வந்திருக் கிறது மெழுகு சிலை. இப்போது அதன் மீது மண்ணால் ‘கோர்’ கட்டி வைத்திருக்கிறோம். இன்னும் பத்து நாளில் ஐம் பொன் சிலை உருவாகிவிடும்’’ என்றார்.
எஸ்.எம். சந்திரசேகர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago