திண்டுக்கல்லில் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக பள்ளிவாசல் சார்பில் 15,000 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
திண்டுக்கல் நாகல் நகர் பள்ளிவாசலில் கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதனை முன்னிட்டு மதநல்லிணக்க விருந்தாக பொதுமக்களுக்கு கைமா பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது.
இதற்காக 2000 ஆயிரம் கிலோ அரிசி, 1000 கிலோ இறைச்சி, 100 கிலோ தக்காளி, 30 ஆயிரம் முட்டைகள் கொண்டு கைமா பிரியாணி தயார் செய்யப்பட்டது. பயன்படுத்தி பிரியாணி தயாரிக்கப்பட்டது.
பிரியாணி தயாரிப்பில் பள்ளிவாசலைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை பிரியாணி வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் நடக்கும் விழா என்பதால் விவரம் அறிந்தவர்கள் மத எல்லைகளைக் கடந்து பிரியாணியை வாங்க நீன்ட வரிசையில் காத்திருந்தனர்.
பாத்திரங்களுடன் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நின்ற பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பிரியாணியை வாங்கிச் சென்றனர்.
இது மதநல்லிணக்கத்தை எடுத்துரைப்பதாகத் திகழ்ந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago