வேலூர் கோட்டை பூங்கா பகுதியில் இரவு நேரத்தில் காதலன் முன்னிலையில் இளம்பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது இளம் பெண். இவர், வேலூரில் உள்ள ஒரு துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். அதே கடையில் காட்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞரும் பணியாற்றி வருகிறார். இவர்கள், இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு பணி முடிந்த பிறகு இருவரும் ஆட்டோவில் சாரதி மாளிகை எதிரேயுள்ள கோட்டை பூங்காவுக்குச் சென்றுள்ளனர்.
பூங்கா இரவு 8 மணிக்கு மூடப்பட்ட நிலையில் இருவரும் மீன் மார்க்கெட் எதிரே உள்ள இரும்பு தடுப்புகளை தாண்டி பூங்காவுக்குள் சென்றுள்ளனர். அகழியின் கரையில் அமர்ந்தபடி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் கத்தி முனையில் இளம் பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர். இளைஞரின் கண் முன்னே இளம்பெண்ணை 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், இளம்பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கம்மல் மற்றும் இளைஞர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு அவர்கள் தப்பியுள்ளனர். உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட இளம் பெண்ணை அவரது காதலர் அழைத்துக் கொண்டு இரவு 11.30 மணியளவில் பூங்காவுக்கு வெளியே வந்துள்ளார். இது தொடர்பாக வடக்கு காவல் நிலையத்தில் இளைஞர் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் சரக டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் வடக்கு காவல் நிலையத்தில் நேற்று விசாரணை நடத்தினர். மேலும், புகார் தெரிவித்த இளைஞரை கோட்டை பூங்கா பகுதிக்கு அழைத்துச் சென்று இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை எவ்வாறு நடந்தது என்பது குறித்து கேட்டறிந்தனர்.
3 தனிப்படைகள் அமைப்பு
கோட்டைப் பூங்காவில் இளம்பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அதன் அடிப்படையில், வேலூர் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் நேற்று பிடித்து விசாரித்தனர். இவர்கள் இருவரும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்கள் என உறுதியானது. இதில், தொடர்புடைய மேலும் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
வேலூர் கோட்டை பூங்காவில் இரவு நேரங்களில் பூங்காவை மூடியதும் உள்ளே செல்லும் சமூக விரோதிகள் அகழிக் கரையையொட்டி அமைந்துள்ள புதர்களின் மறைவில் மதுபானம் அருந்துவதுடன் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரு கின்றனர். கோட்டையில் இரவு நேரங்களில் போதிய காவலர்கள் நியமிக்காததால் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாரிடம் கேட்டதற்கு, ‘‘வேலூர் கோட்டை பகுதியில் இரவு 10 மணியளவில் காவல் துறையினர் ரோந்து செல்கின்றனர். அதேநேரம், கோட்டைப் பகுதி மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு போதிய அளவுக்கு இரவு காவலர்களை அவர்கள்தான் நியமிக்க வேண்டும்.
இது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். இரவு நேரங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. மேலும், கோட்டை பகுதியில் கண்காணிப்புப் பணியை அதிகரிக்கவும் எங்கள் தரப்பில் நடவடிக்கை எடுத்துள் ளோம்’’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago