மதுரையில் விறுவிறுப்பாக நடைபெறும் 'பொங்கல்  பறவைகள் கணக்கெடுப்பு': சேமட்டான்குளம் கண்மாயில் 42 வகை பறவைகள் பதிவு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகப் பறவைகளின் பரவல், தற்போதைய நிலை, அவை வாழுமிடங்களின் நிலை முதலியவற்றை தொடர்ந்து கண்காணிக்க பறவையியல் ஆர்வலர்களால் ஆண்டுதோறும் பொங்கல் நாட்களில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கடந்த 16-ம் தேதி இந்த பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கி நடந்து வருகிறது. நாளை 19-ம் தேதி வரை, இந்த பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம் எங்கும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம் திருநகர் ஊர்வனம் விலங்குகள் பாதுகாப்பு குழுவினர், திருநகர் சேமட்டான்குளம் கண்மாயில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினர்.

இதில், முக்குளிப்பான், புள்ளி மூக்கு தாரா, நீர்க்காகம், குளத்து நாரை, வக்கா, செந்நாரை, சாம்பல் நாரை, சின்னக் கொக்கு, கருப்புக் கோட்டான், நத்தைக் கொத்தி நாரை உள்பட சுமார் 45 வகையான பறவைகளைப் பதிவு செய்தனர்.

இதேபோல், தமிழகம் முழுவதும் நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பில் அந்தந்த நீர்நிலைகளில் காணப்படும் பறவைகள், பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்