தாயின் சடலத்துடன் மாலத்தீவில் தவித்த கூலித் தொழிலாளிக்கு உதவிய ‘வாட்ஸ் அப்’ நண்பர்கள்

By சி.கதிரவன்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் தாயார் மாலத்தீவில் உடல் நலக் குறைவால் இறந்தார். அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர, ரூ.2.25 லட்சத்தை ‘வாட்ஸ் அப்’ மூலம் திரட்டி அளித் துள்ளது தமிழ்நாடு சமூக சேவை கழகம் என்ற ‘வாட்ஸ் அப்’ குழு.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள நாச்சியார்கோவில் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் தவமணி என்கிற ஆனந்தபுஷ்பம் (55). இவரது கணவர் செல்வராஜ் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். குடும்ப வறுமை யால் வீட்டு வேலை செய்வதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆனந்த புஷ்பம் மாலத்தீவு சென்றுள்ளார்.

இவரைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது மகன் மோகன்தாஸ் கட்டுமான வேலைக்காக மாலத்தீவுக்குச் சென்று அங்கே தாயுடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் ஆனந்தபுஷ்பம், ஆகஸ்ட் 12-ம் தேதி இறந்தார். தாயாரின் உடலை சொந்த ஊரில் அடக்க செய்ய வேண்டும் என விரும்பினார் மோகன்தாஸ். ஆனால், தாயின் சடலத்தை கும்ப கோணம் கொண்டு வருவதற்கு போதிய பணம் இல்லாததால் தவித்தார். இதனை அறிந்த வினோத் தேவராஜ் என்ற நண்பர், தான் உறுப்பினராக உள்ள ‘வாட்ஸ் அப்’ நண்பர்கள் குழுவான தமிழ் நாடு சமூக சேவை கழக நிர்வாகி களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சேவை கழகத் தலைவரான திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த முகமது ஷரீப், மாநிலச் செயலாளரான பட்டுக்கோட்டை பிரபாகரன், பொருளாளர் சையது யூசூப் மற்றும் சக ‘வாட்ஸ் அப்’ குழு உறுப்பினர்கள் ரூ.2.25 லட்சத்தை வழங்கி, மாலத்தீவிலிருந்து ஆனந்தபுஷ்பத்தின் சடலத்துடன் மோகன்தாஸ் சொந்த ஊருக்கு வருவதற்கு உதவினர்.

இதையடுத்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கி ருந்து சொந்த ஊருக்கு தாயின் சடலத்துடன் மோகன்தாஸ் வந்து சேர்ந்தார். திருவனந்தபுரத்தி லிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சமூக சேவை கழக உறுப்பினர்களின் உதவியோடு நாச்சியார்கோவிலுக்கு நேற்று உடல் கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து ‘வாட்ஸ் அப்’ கழகத்தின் செயலாளரான பட்டுக் கோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் ‘தி இந்து’விடம் கூறியது:

இந்த அமைப்பு 2007-ம் ஆண்டில் 4 பேருடன் தொடங் கப்பட்டது. தற்போது ‘வாட்ஸ் அப்’ மூலம் தமிழகம், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் சுமார் 1,400 பேரை உறுப்பினர் களாகக் கொண்டு செயல்படுகிறது.

வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து நாடு திரும்ப முடியா மல் தவிப்பவர்கள், மரணமடைந் தவர்களின் உடலை கொண்டு வர உதவுதல், வெளிநாடுகளில் குடியேற்றப் பிரிவு பிரச்சினைகள் உட்பட பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு நாங் கள் உதவி வருகிறோம். இதற்கு முன்பே இது போன்று வெளிநாடு களில் இறந்த 5 பேரின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவியுள்ளோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்