நீதிமன்றத்துக்கு வெளியே சமரச தீர்வு மூலம் வழக்குகள் முடிக் கப்படும்போது நேரமும், பணமும் மிச்சமாவதால் மாற்றுத் தீர்வு முறைக்கு வழக்காடிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், நீதிமன்றத்துக்கு வெளியே அதிக செலவில்லாமல், தங்களுக்கு தேவையான தீர்வை பெறவும் உருவாக்கப்பட்ட நடை முறையே மாற்றுமுறை தீர்வு ஆகும்.
இதனைச் செயல்படுத்த 1999-ம் ஆண்டு உரிமையியல் விசாரணை முறைச் சட்டத்தில் பிரிவு 89-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, இரு தரப்பினரையும் அழைத்து 4 விதமான மாற்று முறை தீர்வில் ஏதாவது ஒன்றின் மூலம் தங்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தும்.
மாற்றுமுறை தீர்வில், இசைவுத் தீர்வு முறை (Arbitration), இசைவு இணக்கம் (Concilliation), மக்கள் நீதிமன்றம் (Lok Adalat), சமரசம் (Mediation) ஆகிய 4 வகைகள் உள்ளன.
இவற்றில் இசைவுத் தீர்வு மற்றும் இசைவு இணக்கம் ஆகிய இரண்டுக்கும் முறைப்படியாக இயற்றப்பட்ட (Arbitration and Concilliation Act 1966) சட்டம் உள்ளது. மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளை தீர்வு செய்வதற்கும் (Legal Services Authority Act 1987) சட்டம் உள்ளது. சமரசம் என்பது இரு தரப்பினரையும் அழைத்து, மூன்றாம் நபரின் உதவி யோடு சமரசம் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டு, இரு தரப்பினருக் கும் பொதுவாக பிரச்சினையை முடிக்கும் முறையாகும். இதுவும் சட்டத்தால் ஏற்புடைய ஒரு தீர்வு நிலையாகும்.
இந்த 4 முறைகளில், வழக்குக ளுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை கடந்த 2010-ம் ஆண்டு வழக்கு ஒன்றை விசாரித்த போது பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அதில், கீழமை நீதிமன்றங்களுக்கு உரிய நெறிமுறைகளையும், வழிகாட்டு தல்களையும் வழங்கியுள்ளது.
முதலாவதாக, இசைவுத் தீர்வு முறையில் ஒரு வழக்கை முடிக்க வேண்டுமென்றால் அதற்கு முன்ன தாக இரு தரப்பினரும் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். பிறகு இரு தரப்பினரும் நடுவர் ஒருவரை தேர்வு செய்துகொள்ளலாம். அவர் முன்னிலையில் நடக்கும் பேச்சு வார்த்தையின் முடிவில் எழுத்து வடிவத்தில் தீர்ப்பு வழங்கப்படும். இம்முறையில் அதிருப்தி அடைந்த வர் மேல்முறையீடு செய்ய சட்ட வகை உள்ளது. அதுபோல நடுவர் பிறப்பிக்கும் தீர்ப்பை நீதிமன்றம் மூலம் சட்டப்படி நிறைவேற்றவும் முடியும்.
இரண்டாவதாக, இசைவு இணக் கம் மூலம் வழக்கை முடிக்கும் நபர்கள், உரிமையியல் விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டத்தின் கீழ் கூறப் பட்டுள்ள விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. இரு தரப்பினரும் தங்கள் கருத்துகளை எடுத்துரைக்கவும், சமரச உடன்பாடு ஏற்படுத்தவும் நடுவர் முயற்சிக்க வேண்டும். எந்த தரப்பினரையும் அவர் கட்டாயப்படுத்தக் கூடாது. இரு தரப்பினரும் மனமுவந்து உடன்பாட்டுக்கு வந்தால், அந்த தீர்வை நடுவர் அறிவிப்பார். அது, நீதிமன்ற தீர்ப்புக்கு ஒப்பானதாகும்.
இந்த 2 தீர்வு முறையிலும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் தொடர்பான வழக்குகளே பேசித் தீர்வு காணப்படுகின்றன. மும்பை, பெங்களூர் போன்ற வர்த்தக நகரங்களில் பிரபலமான அளவுக்கு சென்னையில் இத்தீர்வு முறைகள் பிரபலமாகவில்லை. இப்போது தொடக்க நிலையில்தான் இருக்கின்றன.
அதேநேரத்தில் மக்கள் நீதிமன்றத்துக்கு பெரும் வரவேற்பு உள்ளது. சமரச தீர்வு முறையும் வழக்காடிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது என மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார்.
4 விதமான மாற்று முறை தீர்வில் ஏதாவது ஒன்றின் மூலம் தங்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago