பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை

By கி.தனபாலன்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த டிசம்பர் 28-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதபட்டிணத்தில் இருந்து முத்தையன், சேகர், அண்ணாதுரை ஆகிய மூன்று பேருக்கு சொந்தமான விசைபடகுகளில் மீன்பிடிக்கச் சென்ற காளிதாஸ், ராக்கப்பன், ஆதவன், ஹாரீஸ், சுந்தர் உள்ளிட்ட 14 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இந்திய அரசு இலங்கை அரசை கேட்டு கொண்டது. அதனடிப்படையில் இலங்கை அரசு தமிழக மீனவர்கள் 14 பேரையும் விடுதலை செய்ய நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

அதனையடுத்து யாழ்பாணம் நீதிமன்ற நீதிபதி யூட்சன் தமிழக மீனவர்கள் 14 பேரையும் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்

மேலும் நீதிபதி, வரும் மார்ச் 18ம் தேதி படகின் உரிய ஆவணங்களுடன் படகு உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், தவறும் பட்சத்தில் விசைப்படகு அரசுடமை ஆக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் கொழும்பிலுள்ள மெருஹானா முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் ஓரிரு நாட்களில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்