கீழடி தொல்பொருள் கண்காட்சியை பார்வையிட்ட ராஜீவ் கொலை வழக்கு ஆயுள் கைதி ரவிச்சந்திரன்

By சுப.ஜனநாயகச் செல்வம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி ரவிச்சந்திரன் இன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் உள்ள கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சியினை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவி என்ற ரவிச்சந்திரன். இவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக மதுரை மத்திய சிறையில் உள்ளார்.

தற்போது அவரது தாயை காண்பதற்காக மதுரை ஐகோர்ட் கிளை ஜன.10-ம் தேதி முதல் 25ம் தேதி வரை அவருக்கு பரோல் வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் ரோடு, மீனாம்பிகை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கடந்த 10-ம் தேதி சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்றார்.

அதனைத் தொடர்ந்து மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் உள்ள கீழடி அகழாய்வு தொல்பொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடனேயே அவர் அழைத்து வரப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்