சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.இதற்காக பந்தளம் அரண்மனையில் இருந்து ஆபரணப் பெட்டிகள் கொண்டு வரப்படுகின்றன. நாளைமுதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஜன.20-ம் தேதி இரவு நடைசாத்தப்படும் என்று தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல் டிச.27-ம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மகர பூஜைக்காக டிச. 30-ம் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மகர விளக்கு பூஜை நாளை (புதன்) மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
ஐயப்பன் தனது ராஜவம்சத்துப் பெற்றோருக்காக ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று உத்திர நட்சத்திரத்தில் பொன்னம்பலமேடு என்ற இடத்தில் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். இதற்காக இன்றைக்கும் ராஜவம்சத்து வாரிசுகள் தங்கம், வைரம் உள்ளிட்டபல்வேறு ஆபரணங்களை ஐயப்பனுக்கு சாத்தி ஜோதியை தரிசிப்பது வழக்கம்.
இதற்காக ஆபரணப் பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்து வரப்படுகிறது. பாம்பாடிதலம் என்ற இடத்தில் நேற்றிரவு ஓய்வு எடுத்து மீண்டும் பெரியவாரை வட்டம், நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக நாளை சன்னிதானம் சென்றடையும்.
ஐயப்பனுக்கு ஆண்டு முழுவதும் மேல்சாந்திகள் வழிபாடுகளை மேற்கொண்டாலும் ஜன.15 மகர பூஜையில் இருந்து20-ம் தேதி வரை ஐயப்பனுக்கு ராஜவம்சத்து வாரிசுகளே பூஜைசெய்வர். இதற்காக ராஜவம்சத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆபரணப் பெட்டிகளுடன் வருகின்றனர்.
புல்மேடு பாதையில் இருந்து பார்த்தால் மகரஜோதி தெளிவாகத் தெரியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் அந்த வழியே சென்று கொண்டிருக்கின்றனர். இதற்காக வன அதிகாரிகள் குழுவாக செயல்பட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மகர விளக்குப் பூஜை 20-ம்தேதி இரவு முடிந்ததும் மறுநாள் காலை ராஜவம்சத்து வாரிசுகள் ஐயப்பனிடம் சோழி உருட்டி உத்தரவுகளைக் கேட்பது வழக்கம். 21-ம் தேதி ஆபரணப் பெட்டிகளுடன் அவர்கள் மீண்டும் பந்தளத்துக்கு புறப்பட்டுச் செல்வர்.
மண்டல பூஜை முடிந்ததும் பக்தர்கள் வருகை கடந்த வாரம்வெகுவாய் குறைதிருந்த நிலையில் தற்போது மகர பூஜைக்காகஅதிக பக்தர்கள் வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago