அரிசி ரேஷன் கார்டுதாரர் களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.ஆயிரம் பெறுவதற்கான கால அவகாசம் வரும் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ஆட்சியர் ராமன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு அனைத்து அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும், முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, 2 அடி நீள கரும்புத் துண்டு, திராட்சை, முந்திரி தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் ரொக்கம் ரூ.ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு கடந்த 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வழங்கப்பட்டது. மேலும், விடுபட்டவர்களுக்கு நேற்று (13-ம் தேதி) வழங்கப்பட்டது. தற்போது, பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 21-ம் தேதி வரை வழங்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பரிசுத் தொகுப்பு வாங்காமல் விடுபட்டவர்கள் ரேஷன்கடை வேலை நாட்களில் வரும் 21-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago