இந்திய நாடு உலகத்திற்கே ஆன்மிக குரு: துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேச்சு  

By பிடிஐ

சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தின் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பேசிய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ‘அனைத்து மதங்களின் மீதான மரியாதை என்பது இந்திய ரத்தத்தில் கலந்துள்ளது’ என்றார்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தின கொண்டாட்டங்களும் இணைந்ததையடுத்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

விவேகானந்தரை மக்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு அவரது போதனைகளை பரப்ப வேண்டும், இது மனித குலம் மேம்பாடு அடடைவதற்கான நிரந்தர போதனைகளாகும்.

விவேகானந்தர் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி, மதரீதியிலான போதனைகளை அவர் மறுத்தார், மாறாக மதம் மனிதகுல மேம்பாட்டுக்கானது என்று நம்பினார், அதாவ்து சாதி மத பேதமின்றி மனித குலம் தழைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். மனிதகுலம் தழைக்க ஆன்மீகவாதம் மிக முக்கியமானது என்று விவேகானந்தர் வலியுறுத்தினார்.

ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தை அவர் அழுத்தி வலியுறுத்தினார், ஒரு விதத்தில் இந்தியா உலகிறே ஒரு ஆன்மிக குரு, ஆறுதல், வழிகாட்டுதல், ஆன்மிகம் போன்றவற்றிற்கு மக்கள் இந்தியாவைத்தான் நாடுகின்றனர்.

விவேகானந்தரை மேற்கோள் காட்டிய வெங்கய்ய நாயுடு, “சகிப்புத்தன்மையையும் பொது ஏற்புடைமையையும் சொல்லிக் கொடுத்த மதத்தைச் சார்ந்தவனாக தான் இருப்பது பெருமை அளிக்கிறது, என்றார் விவேகானந்தர், அனைத்து மதங்களும் உண்மைதான் என்று கூறும் ஒரே மதம்.

அதுதான் இந்துமதத்தின் அளப்பரிய பெருமை.

சிலர் சர்ச்சைக்குரியதாக்கினாலும் அடக்குமுறையை அனுபவித்த மக்களை நாம் ஏற்றுக் கொள்ள தயாராகியிருக்கிறோம். இதுதான் நம் பண்பாடு, நம் பாரம்பரியம், இதைத்தான் முன்னோர்களும் நமக்கு தெரிவித்தனர்.

நாம் சர்வதர்ம சம்பாவனா என்ற அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை என்பதை பின்பற்றுபவர்கள். இது நம் இந்திய ரத்தத்தில் உள்ளது. இப்போது மக்கள் மதச்சார்பின்மை, அரசியல் சாசனம் என்று பேசுகின்றனர். அரசியல் சாசனம் பிற்பாடுதான் வருகிறது ஆனால் அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை என்பது நம் ரத்தத்தில் ஏற்கெனவே உள்ளதுதான்.

நாம் எந்த ஒரு மதமும் முக்கிய என்று நம்புகிறோம், சர்வதர்மா சம்பாவனா என்பது நம் நாகரிகத்தின் சாராம்சமாகும். ஆனால் நம் நாட்டில் சிலருக்கு இந்து என்ற வார்த்தையைக் கேட்டாலே ஒவ்வாமை வந்து விடுகிறது. நாம் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது, அவர்கள் அப்படி கருத உரிமை உண்டு. ஆனால் அவர்கள் கருதுவது சரியல்ல.
யோகா என்பது நம் உடலுக்கானதே தவிர மோடி என்பதனால் அல்ல” என்றார்.

முன்னதாக வெங்கய்ய நாயுடு தன் பழைய நண்பர்களுடன் பாட்மிண்டன் ஆடி மகிழ்ந்தார். வெங்கய்ய நாயுடுவை முதல்வர் கே.பழனிசாமியும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் வரவேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்