பன்முக கலாச்சாரத்தின் தாயகம் இந்தியா- குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பெருமிதம்

By செய்திப்பிரிவு

பன்முக கலாச்சாரத்தின் தாயக மாக இந்தியா திகழ்கிறது என்று திருவையாறு தியாகராஜர் ஆரா தனை விழாவை நேற்று தொடங்கி வைத்த குடியரசு துணைத் தலை வர் வெங்கய்ய நாயுடு தெரிவித் தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறில் 173-வது தியாகராஜ ஆரா தனை விழாவை நேற்று மாலை தொடங்கி வைத்து அவர் பேசிய தாவது: இசை உலகில் உயர்ந்த இடத்தைப் பிடித்த, ஆளுமை மிக்கவராக தியாகராஜ சுவாமிகள் இருந்தார் என்பதில் எந்த சந்தேக மும் இல்லை. நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை செம்மைப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்புகளை அளவிடவோ, மதிப்பிடவோ முடியாது. அது எல்லையில்லாத அளவுக்கு இருக்கிறது.

ரோமாபுரி, பாபிலோனியா, கிரேக்கம், எகிப்து போன்ற நாக ரிகங்களைபோல இந்திய நாக ரிகம் மிகவும் பழமை வாய்ந்தது. ஆனால், இவற்றில் இந்திய நாகரிகம் மட்டுமே தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.

பன்முக கலாச்சாரத்தின் தாயக மாக இந்தியா திகழ்கிறது. இந்திய கலாச்சாரம், பல்வேறு கலாச் சாரங்களை உள்ளடக்கியதாக வர்ணிக்கப்படும் ஒன்று. இது, இந்திய துணைக் கண்டம் முழுக்க பரவியுள்ளது.

மற்ற நாடுகளில் கடவுள் ஒரு வரே என்கின்றனர். நம் பண்பாட் டில் எவ்வளவு கடவுள்கள் வேண்டு மானாலும் இருக்கலாம். கோடிக் கணக்கில் கடவுள்கள் இருக்கும் நிலையில் அடுத்து ஒரு கடவுளும் வரலாம். அது தவறு ஒன்றும் இல்லை என்பதுதான் நம் பண்பாட்டின் சிறப்பு.

தாய்மொழிக் கல்வி

நம் நாட்டில் எத்தனையோ கட்சி கள் இருக்கலாம். நாம் எந்தக் கட்சி யில் வேண்டுமானாலும் இருக்க லாம். ஆனால், நாட்டின் வளர்ச்சி என்று வரும்போது அனைவரும் ஒரே கட்சியை ஏற்க வேண்டும். எந்தக் கட்சியில் இருந்தாலும் நாம் இந்தியர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

தாய்மொழியிலேயே கல்வி கற்க வேண்டும். குறிப்பாக பள்ளிக் கல்வியை ஆங்கில மொழியில் கற்பதைவிட தாய் மொழியில் கற் பது அவசியம். சிறந்த சிந்தனை களைத் தாய்மொழியில்தான் பெறமுடியும். எனவே, தாய் மொழியைக் கைவிடக் கூடாது.

மக்களை இசை ஒருங்கிணைக் கிறது. நம்முடைய இசை உலகப் புகழ் பெற்றது. இசையில் நாம் கவனம் செலுத்தினால் நம் மனதும் மேம்படும். குழந்தைக்கு தாய் பாடும் தாலாட்டில் தொடங்கி, வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இசை ஊடுருவி நிற்கிறது. நமது பணி, நமது உறவுமுறைகள், கடவுளை வணங்குவது என நம் வாழ்வுடன் இசை கலந்தே இருக்கிறது. தூய்மையான இசை என்பது, நமது ஆன்மாக்களை செம்மைப்படுத்தக் கூடியது.

இங்கு பாயும் காவிரி நதியைப் பார்க்கும்போது மனம் அமைதி அடைகிறது. இந்த நதியை நாம் பாதுகாக்க வேண்டும். அதேபோல நீர்நிலைகள் அனைத்தையும் பாதுகாப்பதுடன், தண்ணீர் சிக்க னத்தையும் நாம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக தியாக பிரம்ம மஹோற்சவ சபாவின் செயலாளர் ஏ.கே.பழனிவேல் வரவேற்றார். சபாவின் அறங்காவலர் குழுத் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். விழாவில் தமிழக சுற் றுலாத் துறை அமைச்சர் என்.நட ராஜன், தியாக பிரம்ம மஹோற் சவ சபா செயலாளர் முஷ் ணம் வி.ராஜாராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்