ஐஐடி முன்னாள் மாணவர்கள் ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை ஐஐடியில் புதிதாக அதிநவீன வசதிகளுடன் ரோபோட்டிக் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.1 கோடி பங்களிப்பு நிதி ஐஐடி நிர்வாகத்திடம் நேற்று வழங்கப்பட்டது.

இந்த ஆய்வகத்தில் ரோபோட் டிக் பிரிவில் படிக்கும் மாணவர் களுக்கு அதிநவீன தொழில் நுட்பக் கருவிகளை கொண்டு ரோபோக்களை வடிவமைத்தல் உட்பட பல அம்சங்கள் கற்றுதரப் பட உள்ளன. குறிப்பாக மருத் துவத் துறையில் பயன்படும் ரோபோக்களை வடிவமைக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE