திமிலுடைய நாட்டு இனக் காளைகள் மட் டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதிக் கப்படும் என தமிழ்நாடு கால்நடை பரா மரிப்புத் துறை திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடக்கும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
பாரம்பரியமாக நடக்கும் இந்தப் போட்டி களில் பங்கேற்பதை காளை வளர்ப் போரும், மாடுபிடி வீரர்களும் கவுரவமாகப் பார்ப்பார்கள். இந்தப் போட்டிகள் நெருங்கிவிட்டதால் அதற்கான ஏற்பாடு களை மாவட்ட நிர்வாகமும், கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டில்களில் கலந்து கொள்ளும் காளைகளுக்கான உடற் தகுதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ள தகுதியான வகையில் உயரம் மற்றும் உடல்திறன் உள்ளதா என்பதைப் பரி சோதனை செய்த பின்னரே கால்நடை மருத்துவர்கள் இந்தத் தகுதிச் சான்றிதழ் களை வழங்கி வருகின்றனர்.
வரும் 12-ம் தேதி வரை அந்தந்தப் பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளில் பரிசோதனை செய்து தகுதி உடைய கால்நடைகளுக்குத் தகுதிச் சான் றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என கால்நடைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை கால்நடைத் துறை மாவட்ட இணை இயக்குநர் தா.சுரேஷ் கிறிஸ்டோபர் கூறியதாவது:
ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகள் 120 சென்டி மீட்டருக்கு அதிக மான உயரம் கொண்டதாக இருக்க வேண் டும். 3 முதல் 8 வயதுடைய காளைகளாக இருக்க வேண்டும். நான்கு பற்கள் இருக்க வேண்டும். திமில் உள்ள நாட்டினக் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு அனு மதிக்கப்படும். காளைகள் ஓடும் பகுதியில் இருந்து சேகரிப்புப் பகுதி வரை 8 இரட்டை தடுப்பு அரண் அமைக்கப்பட வேண்டும். இந்தியப் பிராணிகள் நல வாரியம் வழங்கியுள்ள பதாகைகள் போதுமான எண்ணிக்கையில் நிறுவப்பட வேண்டும். ஜல்லிக்கட்டில் காளைக்குப் போதுமான குடிநீர், ஓய்வு, தங்குமிடம், தீவனங்கள் வழங்கப்பட வேண்டும். உடல் தகுதிச் சான்று பெற வரும் காளை உரிமையாளர்கள் ஆதார், குடும்ப அட்டை நகல், காளை வளர்ப்பவரின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்.
இந்தத் தகுதிச் சான்று இருந்தால் மட்டுமே, ஜல்லிக்கட்டில் காளைகள் கலந்து கொள்வதற்கான பதிவு டோக்கன் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago