பதவியேற்றதும் உள்ளாட்சி பிரதிநிதிகளை கட்டுக்குள் கொண்டுவந்த கட்சியினர்: வாழ்த்து கூற முடியாமல் தவித்த உறவினர்கள்- தேனியில் பரபரப்பு

By என்.கணேஷ்ராஜ்

ஒன்றிய அலுவலகங்களில் பதவியேற்றதும் அதிமுக, திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக வலுக்கட்டாயமாக கட்சியினர் அவர்களை அழைத்துச் சென்றனர். இதனால் அவர்களது உறவினர்கள் வாழ்த்து கூற முடியாமல் பரிதவித்தனர்.

தேனி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி அந்தந்த உள்ளாட்சிகளில் நடைபெற்றது.

பெரியகுளம் ஒன்றியத்தில் மொத்தம் 16 வார்டு உறுப்பினர்களில் 8 வார்டுகளை திமுக கைப்பற்றி இருந்தது. அதிமுக கூட்டணி 7 வார்டுகளிலும், அமமுக ஒருவார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. அமமுக ஆதரவைப் பொறுத்து தலைவர் பதவியை பெற வேண்டிய நிலை அக்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே அதிமுக, திமுக கட்சிகள் எதிரணி உறுப்பினர்களை இழுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்று பதவியேற்று அலுவலகத்தை விட்டு வெளியேறியதும் கட்சி உறுப்பினர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு திமுகவினர் தங்கள் கட்சி பிரதிநிதிகளை சிரமப்பட்டு ஒருங்கிணைத்து ஒரே வாகனத்தில் ஏற்றி அதிவேகமாக சென்றனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

சின்னமனூரில் சர்ச்சை..

இதே போல் சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள 10 வார்டுகளில் 6 திமுகவும், மீதம் உள்ள 4 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. பதவியேற்று வெளியேறும் போது முதல் வார்டு திமுக உறுப்பினர் ஜெயந்தி, திமுகவினர் அழைத்துச் செல்லும் காரில் ஏற மறுத்தார். இதனால் அப்பகுதியில் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் அங்கு வந்து தங்கள் வாகனத்தில் அவரை ஏற்றிக்கொண்டு அவரது வீட்டிற்கு அனுப்ப முயன்றனர். இதனை திமுகவினர் தடுத்து நிறுத்தினர். அதிமுகவினரிடம் எங்கள் கட்சி வார்டு உறுப்பினரை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்று கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சர்ச்சை நிலவியது. பின்பு ஜெயந்தியினுடைய காரில் போலீஸார் அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் உள்ள 14 வார்டுகளில் தலா 7 இடங்களில் அதிமுக, திமுக வெற்றி பெற்றுள்ளது. பதவியேற்பு முடிந்ததும் இருதரப்பினரும் தனித்தனி காரில் தங்கள் உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு வேகமாகக் கிளம்பினர். இதே பரபரப்பு தேனி, ஆண்டிபட்டி, கம்பம், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட ஒன்றியங்களிலும் ஏற்பட்டது.

அலுவலகத்திற்குள் உறவினர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் வருவதைத் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அனைத்து ஒன்றியங்களிலும் கட்சியினர் எதிரணியினரை தங்கள்பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் கடுமையாக ஈடுபட்டனர். இதனால் பதவியேற்பை மகிழ்ச்சியாக மேற்கொள்ள முடியாமல் ஒருவித பதற்றத்துடனேயே ஏற்க வேண்டிய நிலை அவர்களக்கு ஏற்பட்டது.

பதவியேற்ற பிறகு ஒவ்வொரு ஒன்றியத்திலும் வெளியேறிய தங்கள் கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகளை காரில் அவசரமாக ஏற்றிக் கொண்டு சென்றனர். இதனால் அவர்களது குடும்பத்தினரும்,நண்பர்களும் வாழ்த்து சொல்ல முடியாமல் பரிதவித்தனர்.

வரும் 1-1ம் தேதி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக இவர்களை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்