ஆத்தூர் அருகே கார் - வேன் மோதிய விபத்தில் கோவை வியாபாரி உட்பட 3 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கோவை டவுன் ஹால் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணியம் (45). இவர் அதே பகுதியில் கவரிங் நகைக் கடை நடத்தி வந்தார். மேலும் இவர் கவரிங் நகைகளை சொந்தமாக தயாரித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தார்.

இவரது கடையில் வரதராஜ் (40) என்பவர் பணிபுரிந்து வந்தார். சென்னையில் உள்ள கடைகளுக்கு கவரிங் நகைகளை விற்பனை செய்ய பாலசுப்பிரமணியம் காரில் சென்றார். உடன்வரதராஜ் சென்றார். சென்னையில் இருந்து மீண்டும் காரில் கோவைக்கு வந்து கொண்டிருந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில்கார் வந்தபோது, கோவையில் இருந்து சென்னைக்கு நோக்கி வந்த கூரியர் நிறுவன வேன், கார் மீது நேருக்கு நேர் மோதியதோடு, பள்ளத்தில் காரும், வேனும் கவிழ்ந்தது.

இதில், கார் ஓட்டுநர் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த பாலசுப்பிரமணியம், வரதராஜ் ஆகியோர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்