அதிமுக வசமானது விருதுநகர் மாவட்ட ஊராட்சி; 6 ஊராட்சி ஒன்றியங்களைக் கைப்பற்றியது திமுக

By இ.மணிகண்டன்

உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 ஒன்றியங்களில் 6 ஒன்றியங்களை திமுக கைப்பற்றியது. இழுபறியில் உள்ள நரிக்குடி ஒன்றியத்தைக் கைப்பற்றுவதில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

விருதுநகரில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய 11 ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 20, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 200, ஊராட்சிமன்றத் தலைவர்கள் 450 மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 3,372 என மொத்தம் 4,042 பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், கிராம ஊராட்சித் தலைவர்கள் 23 பேரும், வார்டு உறுப்பினர்கள் 1,028 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய பதவிகளுக்குத் தேர்தல் நடந்தது.

மாவட்ட ஊராட்சி

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில், அதிமுக 13, திமுக 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 1-வது வார்டு மகாலட்சுமி, 2-வது வார்டு வசந்தி, 3-வது வார்டு கணேசன், 4-வது வார்டு வேல் ராணி, 5-வது வார்டு சுபாஷினி, 6-வது வார்டு நர்மதா, 7-வது வார்டு மச்சராஜா, 8-வது வார்டு நாகராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மேலும் 16-வது வார்டில் போட்டியிட்ட முத்துச்செல்வி, 17-வது வார்டில் மகாலட்சுமி, 18-வது வார்டில் மாலதி, 19-வது வார்டில் சீனியம்மாள், 20-வது வார்டில் இந்திரா ஆகிய அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

திமுக சார்பில் 9-வது வார்டில் பாலசந்தர், 10-வது வார்டில் புவனா, 11-வது வார்டில் தமிழ்வாணன், 12-வது வார்டில் பாரதிதாசன், 13-வது வார்டில் போஸ், 14-வது வார்டில் சிவக்குமார், 15-வது வார்டில் முத்துச்செல்வி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மாவட்ட ஊராட்சியில் மொத்தம் உள்ள 20 வார்டுகளில் அதிமுக 13 வார்டுகளில் வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி பிற்படுத்தப் பட்டோருக்கு (பெண்) ஒதுக்கப்பட்டுள்ளதால் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் 1-வது வார்டில் வெற்றி பெற்ற மகாலட்சுமி அல்லது 2-வது வார்டில் வெற்றி பெற்ற வசந்தி தேர்வு செய்யப்படலாம் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இழுபறியில் உள்ள நரிக்குடி ஒன்றியத்தைக் கைப்பற்றுவதில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சறுக்கிய அருப்புக்கோட்டை; வாகை சூடிய வெம்பக்கோட்டை..

அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளில் அதிமுக ஒரு வார்டில் மட்டுமே வெற்றிபெற்றது. திமுக 10 வார்டுகளிலும் மற்றவை 4 வார்டுகளிலும் வெற்றிபெற்றன.

விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளில் அதிமுக 14 வார்டுகளிலும், திமுக 9வார்டுகளிலும் மற்றவை 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றன.

காரியாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 12 வார்டுகளில் அதிமுக 4 வார்டுகளிலும், திமுக 8 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளில் அதிமுக 5 வார்டுகளிலும் திமுக 9 வார்டுகளிலும், தேமுதிக ஒரு வார்டிலும் வெற்றிபெற்றன.

நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 14 வார்டுகளில் அதிமுக 5 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும் மற்றவை 3 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 24 வார்டுகளில் அதிமுக 9 வார்டுகளிலும், திமுக 15 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளில் அதிமுக 3 வார்டுகளிலும் திமுக 9 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 வார்டுகளில் அதிமுக 6 வார்டுகளலும் திமுக 4 வார்டுகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும் மற்றவை 1 வார்டிலும் வெற்றிபெற்றுள்ளன.

சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட 31 வார்டுகளில் அதிமுக 9 வார்டுகளிலும் திமுக 17வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், மற்றவை 4 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 16 வார்டுகளிலும் அதிமுக 5 வார்டுகளிலும், திமுக 8 வார்டுகளிலும், பாஜக ஒரு வார்டிலும் மற்றவை 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 வார்டுகளிலும் அதிமுகவே முழு வெற்றிபெற்றுள்ளது.

அமைச்சருக்கு பின்னடைவு

இதில், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியங்களையும், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சொந்த தொகுதியில் உள்ள சிவகாசி ஒன்றியத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்