செல்லாத தபால் வாக்கிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களே காரணம்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு

By இ.ஜெகநாதன்

செல்லாத தபால் வாக்கிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களே காரணம் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27, 30 தேதிகளில் கிராம ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில்
வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச் சாவடியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

இதில் ஊரகப் பகுதிகளில் வாக்காளராக உள்ள அலுவலர்கள் தங்கள் வாக்குகளை அஞ்சல் வழியில் செலுத்தியிருந்தனர்.

கடந்த இரண்டாம் தேதி வாக்கு எண்ணுகையில் 97 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:

தபால் வாக்குகள் அளிப்பதில் ஒவ்வொரு தேர்தலுக்கும் வெவ்வேறு நடைமுறைகளைத் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அஞ்சல் வாக்குகள் பெரும்பாலானவை செல்லாததது என அறிவித்தது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்களுக்கு கூட தங்கள் வாக்குகளை முறையாக செலுத்தத் தெரியவில்லை என விமர்சனம் எழுந்ததற்கு முழுக் காரணம் தேர்தல் நடத்தும் அலுவலர்களையே சாரும்.

தபால் வாக்கு என்பது சாதரணமாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பது போன்றது அல்ல. இதில் ஊரகப் பகுதிகளில் வாக்காளராக உள்ள ஆசிரியர்கள் தங்கள் வாக்குகளை அஞ்சல் வழியில் செலுத்துவதற்கு உரிய படிவங்களை வழங்குவதிலும், தேர்தல் பணிச்சான்று பெறுவதிலும் மாவட்ட முழுவதும் நடந்த பயிற்சி மையங்களில் வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட அறிவுறுத்தபட்டதால் வாக்குப்பதிவு அலுவலர்களாகிய ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

உள்ளாட்சி தேர்தல்களில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்களிடம் படிவம் 15 ஐ பெற்றுக்கொண்டு தேர்தல் பணிச்சான்றான படிவம் 16-ஐ வழங்க வேண்டும்.

படிவம் 16-ஐ பெற்ற ஆசிரியர்கள் தங்கள் வாக்கு உள்ள பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கி படிவம் 17 ஆன உறுதிமொழி படிவம் மற்றும் வாக்குச்சீட்டு அதற்கான உறைகளைப் பெற்றுதான் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களித்து வாக்குச்சீட்டினை தனி உறையிலும், பணிச்சான்று மற்றம் உறுதிமொழி படிவத்தினை தனியாகவும் வைத்து அதற்கென வழங்கப்பட்ட பெரிய உறையினுள் வைத்து வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும்.

இந்த நடைமுறை சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் மாறுபட்டதாக இருக்கும். எனவே வாக்களிக்கும் முறை குறித்து தேர்தல் பயிற்சி வகுப்பில் தெளிவாக எடுத்துரைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் பயிற்சி அளித்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இரண்டு கட்ட தேர்தல்களிலும் ஆசிரியர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டதால் தபால் வாக்குகளை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். பல இடங்களில் பணிச்சான்று மற்றும் தபால் வாக்கிற்காக ஆசிரியர்கள் அலைகழிக்கப்பட்டனர். இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது.

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு செலுத்தும் நடைமுறைகள் மாறுவதாலும், நடைமுறைகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஏற்பட்ட மாறுபட்ட கருத்துக்களாலும், முறையான வழிகாட்டுதல்களை வழங்க தவறியதாலும் பெரும்பாலான வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முழு பொறுப்பை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களே ஏற்க வேண்டும் அதை விடுத்து ஆசிரியர்களுக்கு வாக்குகள் கூட அளிக்க தெரியவில்லை என்ற கருத்தை பொதுவெளியில் நம்ப வைக்க முயற்சிப்பதையும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை தேவையற்ற காரணங்களை கூறி அலைகழிப்பதோடு அவர்களை அடிமைகள் போல் நடத்த முயற்சிப்பதை இனி வரும் தேர்தல்களில் கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்