சாத்தான்குளத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது, வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்து அலுவலரை மிரட்டியவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சி, வேலன்புதுக்குளம் ஸ்ரீ பாண்டி துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் கடந்த 27.12.2019 அன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
அப்போது, வேலன்புதுக்குளம், நடுத்தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் முத்துமாலை (43), சுடலைக்கண் மகன் பரமசிவன் (32), பரமசிவன் மகன் கண்ணன் (30), ராமச்சந்திரன் மகன் செந்தூர்பாண்டி (45) மற்றும் ஒருவர் வாக்குச் சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவுக்கு இடையூறு செய்யும் வகையில் தேர்தல் அலுவலர்களை, அவர்களது அரசு வேலையை செய்ய விடாமல் தடுத்து மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து வாக்குச்சாவடியின் வாக்குப்பதிவு தலைமை தேர்தல் அதிகாரி சார்லஸ் திரவியம் கொடுத்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 28ம் தேதி முத்துமாலை மற்றும் பரமசிவனை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் முத்துமாலை மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தூத்துக்குடி மாவட்ட எஸ்பிக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
அதன்பேரில் எஸ்பி அருண் பாலகோபாலன் பரிந்துரையின் பேரில், அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டார்.
இதையடுத்து முத்துமாலையை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago