மறுவாக்கு எண்ணிக்கைக் கோரி ஆட்சியரிடம் வேட்பாளர் மனு

By செய்திப்பிரிவு

மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தி கிராம மக்களுடன் பெண் வேட்பாளர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் சற்றுமுன் மனு அளித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சிக்கு உட்பட்ட தலைவர் பதவிக்கு வாலாஜாநகரம் கிராமத்தை சேர்ந்த அபிநயா மற்றும் மகாராணி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

இதில் ஆட்டோ ரிக்சா சின்னத்தில் போட்டியிட்ட அபிநயா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் மகாராணி, சில வாக்கு சீட்டுகளை காணவில்லை எனவே 9 வது வாக்குச்சாவடி பெட்டியை எண்ண வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டு, மனு ஒன்றை அளித்தார்.

இதனையடுத்து மீண்டும் குறிப்பிட்ட வாக்குச் சாவடி வாக்குப் பெட்டி எண்ணப்பட்டது. அதில் திருப்தி அடையாத மகாராணி வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார் இதனையடுத்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் அபிநயா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் அதிக அளவில் குளறுபடி நடந்ததாகவும், வாக்குச்சீட்டில் 13 சீட்டுகளை காணவில்லை என்றும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி கிராம மக்களுடன் நேற்று மாவட்ட ஆட்சியர் த.ரத்னாவிடம் மகாராணி மனு அளித்துள்ளார். இதனால் வாலாஜா நகரம் கிராமம் நேற்று முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE