ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி வார்டில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்ற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுக 4 வார்டுகளிலும், பாஜக ஒன்றிலும், திமுக 11 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும் வெற்றி பெற்றன.
வெற்றி பெற்றவர்கள் விவரம்:
1-வது வார்டு உ.திசைவீரன்(திமுக), 2-வது வார்டு பூ.ஜெகதீஸ்வரி(அதிமுக), 3-வது வார்டு நா.உஷாராணி(அதிமுக), 4-வது வார்டு ஆ.காளியம்மாள்(திமுக), 5-வது வார்டு ப.கற்பகவள்ளி(அதிமுக), 6-வது வார்டு க.ஈஸ்வரி(திமுக), 7-வது வார்டு செ.முருகேசன்(திமுக), 8-வது வார்டு அ.கோவிந்தம்மாள்(திமுக), 9-வது வார்டு பி.நவஜோதி(அதிமுக), 10-வது வார்டு வ.வாசுதேவன்(திமுக), 11-வது வார்டு போ.சசிக்குமார்(திமுக), 12-வது வார்டு வீ.வேலுச்சாமி(காங்கிரஸ்), 13-வது வார்டு ஆர்.செல்வி(பாஜக), 14-வது வார்டு கொ.கார்த்திகேஸ்வரி(திமுக), 15-வது வார்டு க.ஆதித்தன்(திமுக), 16-வது வார்டு கவிதா கதிரேசன்(திமுக), 17-வது வார்டு ஆ.ரவிச்சந்திர ராமவன்னி(திமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மொத்தமுள்ள 17 வார்டுகளில் திமுக 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்ற உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago