நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி, நான்கு ஊராட்சி ஒன்றியங்களையும் மற்றும் மாவட்ட ஊராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது. மாவட்டத்தில் 80 சதவீத ஊரக உள்ளாட்சிப் பதவிகளை திமுக கைப்பற்றியது.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 6 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில், நான்கு திமுக வேட்பாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றனர். மீதமுள்ள ஒரே ஒரு வார்டில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.
மாவட்ட ஊராட்சியில் 1-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அனீபா வெற்றி பெற்றார். 2-வது வார்டில் திமுகவைச் சேர்ந்த பொன்தோஸ் வெற்றி பெற்றார். 3-வது வார்டில் அதிமுகவைச் சேர்ந்த சசிகலா வெற்றி பெற்றார். 4-வது வார்டில் திமுகவைச் சேர்ந்த வனஜா வெற்றி பெற்றார். 5-வது வார்டில் திமுகவைச் சேர்ந்த உமாராஜன் வெற்றி பெற்றாார். 6-வது வார்டில் திமுக வேட்பாளர் மீனா வெற்றி பெற்றார்.
மாவட்டத்தில் உள்ள 59 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளில் திமுக 31 இடங்களையும், அதிமுக 12 இடங்களையும், காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 4 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களையும், பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நான்கு ஊராட்சி ஒன்றியங்களையும் திமுக கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றின.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago