புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,000 ஏக்கரில் செழித்து வளரும் பாரம்பரிய ரக நெற்பயிர்கள் நோய் பாதிப்பில்லாததால் இயற்கை விவசாயிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

இயற்கை விவசாய பயிர் மேலாண்மை முறைகளை கடை பிடித்து சாகுபடி செய்யப்படும் பாரம்பரிய நெற்பயிர்களில் ஆனைக்கொம்பன், புகையான் போன்ற நோய் பாதிப்புகள் இல்லா தது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவமழையும் அடுத்தடுத்து பெய் ததால் தமிழகத்தில் சம்பா நெற் பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டனர். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1.70 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் அஞ்சியதைப் போன்று அடைமழையின்போது வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகி பாதிக்கப்பட வில்லை. ஆனால், அதன் பிறகு ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் நெற்பயிர்கள் கடுமையாகப் பாதிக் கப்பட்டன. இதைத்தொடர்ந்து புகையான், பாக்டீரியல் இலைக் கருகல் என அடுத்தடுத்து தாக்கும் நோய்கள் நெல் விவசாயிகளை கலங்கடிக்கச் செய்து வருகின்றன.

இதற்கிடையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் ஆனைக்கொம்பன் ஈ, தத்துப் பூச்சியின் மூலம் உருவாகும் புகையான் போன்ற நோய் பாதிப்பு எதுவும் இதுவரை இல்லை. இனிமேலும் இருக்காது என பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டுள்ள, இயற்கை விவசாய முறையில் பயிர் மேலாண்மையைக் கடைபிடித்து வரும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பாரம்பரிய நெல் சாகுபடிகளில் ஈடுபட்டு வரும் விவசாயி ஆதப்பன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளைக் கொண்டு பாரம் பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதா னியங்களை சாகுபடி செய்து வருகிறோம்.

அதில், மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் பூங்கார், குள்ளக்கார், அறுபதாம் குறுவை, கருப்புக்கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா உள்ளிட்ட பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பயிர் வளர்ச்சிக்கு ரசாயன உரங்கள் எதையும் பயன்படுத் துவதில்லை. அதேபோன்று, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருந்தால் பூச்சிக்கொல்லி மருந்துகள் எதையும் பயன்படுத்துவதில்லை.

அத்தகைய பாதிப்புகளுக்கான அறிகுறி இருந்தால் மீன் அமிலம், பஞ்சகவ்யம், மூலிகை பூச்சி விரட்டி போன்ற பூச்சி விரட்டி களைத் தயாரித்துப் பயன்படுத்தி வருகிறோம்.

இதுவரை ஆனைக்கொம்பன் ஈ, புகையான் தாக்குதல் மாவட்டத்தில் ஒரு இடத்தில்கூட இல்லை. இயல்பாகவே பாரம் பரிய நெல் ரகங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் அவ்வளவு எளிதாக நோய்வாய்ப் பட்டு விடாது. பயிர் பாதுகாப் புக்கான செலவும் மிகக் குறைவு.

மேலும், மற்ற ரக நெற்பயிர் களுக்கு அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்கள் இடுவதால்தான் அவை எளிதில் பூச்சித் தாக்குத லுக்கு உள்ளாகின்றன. இதை வேளாண் அலுவலர்களே தெரி விக்கின்றனர்.

பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தால் ஏக்கருக்கு 25 மூட்டை கிடைக்கும். ஆனால், மற்ற ரகங்களில் 40 மூட்டைகள் கிடைக்கும். எனினும், மற்ற ரகங்களைவிடப் பாரம்பரிய நெல் ரகங்களுக்கு விலை அதிகமாகக் கிடைக்கும். மண்ணுக்கும், மனித னுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

பூச்சி தாக்குதல், நோய் பாதிப்புகள் எதுவும் இல்லாமல் விளைச்சலுக்கு உத்திரவாதமான சூழல் பாரம்பரிய நெல் ரகங்களில் மட்டுமே உள்ளது என்றார்.புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் கருப்புக்கவுனி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலைப் பார்வையிடும் விவசாயிகள்.படம்: கே.சுரேஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்