வந்தவாசி அருகே விவசாயியின் இரு மனைவிகள் ஊராட்சித் தலைவராகத் தேர்வு

By வ.செந்தில்குமார்

வந்தவாசி அருகே விவசாயியின் இரண்டு மனைவிகள் இரண்டு கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வழுவூர்- அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன். விவசாயி. இவருக்கு செல்வி, காஞ்சனா என்ற இரண்டு மனைவிகள். இவர்களில் செல்வி தனசேகரன் ஏற்கெனவே வழுவூர்- அகரம் கிராம ஊராட்சியின் தலைவராக இருந்துள்ளார். தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வழுவூர்- அகரம் கிராம ஊராட்சியின் தலைவர் பதவிக்கு செல்வி தனசேகரன் மீண்டும் போட்டியிட்டார்.

தனசேகரனின் மற்றொரு மனைவியான காஞ்சனாவின் சொந்த ஊர் கோவில்குப்பம் சாத்தனூர். அவரது சொந்த கிராமத்திலே ஓட்டு இருந்தது. வழுவூர் அகரம் கிராமத்துக்கு மாற்றவில்லை. எனவே, கோவில்குப்பம் சாத்தனூர் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு காஞ்சனா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த இரண்டு கிராம ஊராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 30-ம் தேதி நடந்தது. வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்ட நிலையில் தனசேகரனின் இரண்டு மனைவிகளும் வெற்றி பெற்று தலைவராகியுள்ளனர். இரண்டு மனைவிகளையும் கிராம ஊராட்சித் தலைவர்களாக்கிய தனசேகரனுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 secs ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்