தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை ஊராட்சியில் 10 வாக்குகளைப் பெற்ற பெண் தலைவராக வெற்றி பெற்றார்.
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பிச்சிவிளை ஊராட்சி. இந்த ஊராட்சியில் மொத்தம் 6 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியின் மொத்த வாக்காளர்கள் 785 ஆகும். இதில் 6 பேர் மட்டுமே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்த முறை தலைவர் பதவி சுழற்சி முறையில் பட்டியலினத்துக்கு ஒதுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஊராட்சி மக்கள் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தனர். இதன் காரணமாக 6 வார்டு உறுப்பினர் பதவிக்கும் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் 6 வார்டு உறுப்பினர் பதவிக்குத் தேர்தல் நடைபெறவில்லை.
தலைவர் பதவிக்கு மட்டும் பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, சுந்தராச்சி என்ற இரு பெண்கள் போட்டியிட்டனர். கடந்த 27-ம் தேதி இந்த ஊராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அப்போது பட்டியலினத்தைச் சேர்ந்த 6 பேரும், இதர சமுதாயத்தைச் சேர்ந்த 7 பேரும் என மொத்தம் 13 பேர் மட்டுமே வாக்களித்தனர். இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
இதில் ராஜேஸ்வரிக்கு 10 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சுந்தராச்சிக்கு 2 வாக்குகள் கிடைத்தன. ஒரு வாக்கு செல்லாதது ஆகும்.
இந்த ஊராட்சியில் தலைவர் மட்டுமே உள்ளார். வார்டு உறுப்பினர்கள் யாரும் இல்லை. எனவே, வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago