மக்களுக்கு நல்லது செய்வேன்.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வென்ற துப்புரவு தொழிலாளி சரஸ்வதி உற்சாகம்

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய பெண் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் பஞ்சாயத்தில் அரசு ஊழியராக துப்புரவு பணி செய்து வந்தார் சரஸ்வதி. இவர் மக்கள் சேவையில் நாட்டம் ஏற்பட்டதால் கான்சாபுரம் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எண்ணினார்.

இதற்காக தனது அரசுப் பணியை ராஜினாமா செய்தார்.

கடந்த முறையே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் கடந்த முறை அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் போனது. இதனால் தனது அரசு வேலையை பறிகொடுத்து ஏமாற்றத்தில் இருந்துவந்தார். அதன்பின்னர், சரஸ்வதி பஞ்சாயத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.

இருந்தபோதும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தனது ஆர்வத்தை குறைக்காமல் தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் கான்சாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கபடட் நிலையில் கான்சாபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரஸ்வதி 1113 வாக்குகள் வாங்கி 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

வெற்றி பெற்ற சரஸ்வதி தான் மக்களுக்கு நல்லது செய்வேன் என உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்